ETV Bharat / bharat

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு! டிச.3ல் வாக்கு எண்ணிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 12:09 PM IST

Updated : Oct 9, 2023, 7:18 PM IST

5 states election 2023: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடப்பாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், மற்ற மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது.

இதில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியும், தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சுமுகமாக நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் கடந்த அக். 6ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் அட்டவணை
தேர்தல் அட்டவணை

ஏற்கனவே 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் சார்பில் ஆய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று அக். 9ஆம் தேதி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளைத் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். மேலும், வாக்குப்பதிவு நடைபெற்ற 5 மாநிலங்களிலும் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர், மாநிலத்தில் உள்ளா 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதியும், இராண்டம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 17ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

தெலங்கானா: தெலுங்கான மாநிலத்தில் உள்ள 119 சட்டபேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 35 ஆயிரத்து 356 வாக்குசாவடிகள அமைத்துத் தேர்தல் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 51 ஆயிரத்து 756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்ட போரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் அக்-21 ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கி அக்-30 ஆம் தேதி மனுத்தாக்கல் முடிவடைகிறது. மேலும் வேட்பு மனு பரிசீலனை அக் 31ஆம் தேதியும் வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான காலம் நவம்பர் 2 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மிசோரம் : மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்த் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடுமையான போட்டி: நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக- காங்கிரஸ் கட்சி இடையே நேரடி மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சி அமைத்தது. ஆனால் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினையால் ஆட்சியை இழந்தது. தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த 5 மாநில சட்ட மன்ற தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் பாஜக: இந்தியா முழுவதும் பாஜக செல்வாக்குமிக்க கட்சியா இருந்தாலும் தென்னிந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. ஆனால் அன்மையில் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் தோற்று ஆட்சியை இழந்தது.

இதனால் தென்னிந்தியாவில் பாஜகவின் பிடி தளர்ந்துள்ளது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக பாஜக தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது. இதன் காரணமாகவே அண்மையில் அமித்ஷாவை தொடர்ந்து பிரதமர் மோடி கூட தெலுங்கானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தெலுங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தான் முதலமைச்சராக இருக்கிறார்.

அவரது ஆட்சியின் மீது பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் தெலங்கானாவில் அடிக்கடி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு

Last Updated : Oct 9, 2023, 7:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.