ETV Bharat / bharat

ரூ.3 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்!

author img

By

Published : Mar 23, 2021, 12:00 PM IST

ரூ.3 கோடி தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த காவலர்கள், மூன்று பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

DRI seizes gold  gold seized worth Rs 3.18 cr  Directorate of Revenue Intelligence  gold worth Rs 3.18 cr seized from car in MP  ரூ.3 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்  தங்கக் கட்டிகள் பறிமுதல்  தங்கக் கட்டிகள்  விசாரணை

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர்-தார் சாலையில் ரூ.3 கோடி மதிப்பிலான 100 கிராம் நிறையுள்ள 69 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:-

வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தார்-இந்தூர் சாலையில் உள்ள தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 100 கிராம் எடையுள்ள 69 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தத் தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.3.18 கோடி ஆகும். இதன் பேரில் காரில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்திவருகிறோம்.

இவ்வாறு வருவாய் புலனாய்வு அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.