ETV Bharat / bharat

மருமகனுக்கு 125க்கும் மேற்பட்ட உணவு வகைகளால் 'செம'யாக கவனித்த மாமியார் குடும்பம்!

author img

By

Published : Oct 7, 2022, 3:00 PM IST

ஆந்திரா மாநிலத்தில் வருங்கால மருமகனிற்கு 125 வகை உணவு வகைகளால் விருந்தளித்து மணமகள் குடும்பத்தினர் மகிழ்ச்சிபடுத்தியுள்ளனர்.

Etv Bharat100 க்கும் மேற்பட்ட உணவு வகைகளால் மருமகனை மகிழ்வித்த மாமியார்
Etv Bharat100 க்கும் மேற்பட்ட உணவு வகைகளால் மருமகனை மகிழ்வித்த மாமியார்

ஆந்திரா: விசாகப்பட்டினத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அவர்களின் வருங்கால மருமகனுக்கு 125 வகையான உணவுகளுடன் பிரமாண்டமான விருந்து தயாரித்து கொடுத்து, அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். சிருங்கவரபுகோட்டா நகரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான கபுகந்தி சைதன்யாவுக்கும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிஹாரிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் வரும் முதல் தசரா விருந்துக்கு மருமகனை வீட்டிற்கு அழைத்துள்ளனர், மணமகள் நிகாரிகா குடும்பத்தினர். இதனையடுத்து அவருக்கு 125 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த ஏற்பாட்டைக் கண்ட சைதன்யா ஆச்சரியமடைந்தார். தனது வருங்கால மனைவியின் இல்லத்தாரின் அன்புமழையில் திக்குமுக்காடிப் போனார்.

மேலும் இதுபோல் ஒரு மாபெரும் விருந்தை எதிர்பார்க்கவில்லை எனவும் உவகை தெரிவித்துள்ளார். இந்த விருந்தில் 95 வகை உணவுகள் வெளியில் இருந்து வாங்கியும், மற்றவை அனைத்தும் வீட்டில் செய்தும் என மொத்தம் 125 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

இதையும் படிங்க:விரைவில் ஹைதராபாத்தில் தலித் மாநாடு - தெலங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.