ETV Bharat / bharat

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 2:09 PM IST

Updated : Dec 14, 2023, 3:20 PM IST

Derek O'Brien suspended: தொடர் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடரின் 11வது நாளான இன்று (டிச.14), மாநிலங்களவையில் நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான டெரிக் ஓ பிரையன் பாதுகாப்பு மீறல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கோரினார். மேலும், நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் வந்து, அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என டெரிக் வலியுறுத்தினார்.

இதனையடுத்து மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சபையை விட்டு வெளியேறும்படி கூறினார். ஆனால் டெரிக் வெளியேறாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். அவருடம் சேர்ந்து மற்ற உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த கூட்டத்தொடர் முழுவதிலும் டெரிக் ஓ பிரையன் சஸ்பபெண்ட் செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் இருந்தும் டெரிக் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமுணால் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையனை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற மேல்சபை ஏற்றுக்கொண்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய திரிமுணால் காங்கிரஸ் கட்சி எம்.பி. டோலா சென், “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட மனோரஞ்சனுக்கு பார்வையாளர் சீட்டு பெற உதவியதாக கூறப்படும் பாஜக எம்.பி.பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்.

இதில் நெறிமுறைக் குழு அமைதியாக இருப்பது ஏன்? பாஜக எம்.பியாக இருக்கும் பிரதாப் சிம்ஹாவை ஏன் வெளியேற்றவில்லை. நாடாளும்ன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் மக்களின் கதி என்ன என நாங்கள் அறிய விரும்புகிறோம். உள்துறை அமைச்சர் கூட இதுகுறித்து பேசவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணைத் தேவை” எனத் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக இன்று 8 பாதுகாப்பு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; அவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி.. உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கேட்பு!

Last Updated : Dec 14, 2023, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.