ETV Bharat / bharat

HOROSCOPE: ஜனவரி 8 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி? யாருக்கு அதிர்ஷ்டம்!

author img

By

Published : Jan 8, 2022, 5:31 AM IST

HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்றைய ராசிப் பலன்களைக் காண்போம்.

ஜனவரி 8 ராசிபலன்
ஜனவரி 8 ராசிபலன்

HOROSCOPE: மேஷம்

நீங்கள் தனியாக இருக்கலாம், ஆனால் தனியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் உங்கள் உள் மனத்தின் குரலைக் கேட்டு, உங்களுடைய அசல் தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலில் அன்பானவர்களுடன் அமர்ந்து இசையை ரசித்துக் கொண்டே மாலை நேரத்தைச் செலவிடுங்கள்.

ரிஷபம்

இன்று, உங்கள் பழக்கத்தால் இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிக்கலாம். வீட்டு வேலைகள் மதியம்வரை இழுத்தடிக்கும். அதன்பிறகு, உங்களிடம் எஞ்சியிருக்கும் ஆற்றல், உறுதிப்பாடு, மன வலிமை காரணமாக மட்டுமே நீங்கள் விரும்புவதைச் சாதிக்க முடியும். உங்கள் அன்பானவர்களின் துணையால் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் லாபமானதாகவும், முற்போக்கான நாளாகவும் இருக்கும். வேலைகளில் உற்சாகமான ஊக்குவிப்பையும், பாராட்டையும் எதிர்பார்க்கலாம். அத்துடன் உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும். எனினும், வெற்றியை உங்கள் தலைக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டாம்.

கடகம்

நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் ஆன்மிகம், அர்ப்பணிப்பு எதிர்காலத்தில் நன்மைகளைக் கொடுக்கும். இன்று உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். எதிர்காலத்தை மனத்தில் வைத்துச் செயல்படுவீர்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

சிம்மம்

நாம் உருவாக்கும் நண்பர்களே, நீண்ட கால அடிப்படையில் நாம் யார் என்பதை உருவாக்கும் காரணியாக இருக்கிறது. கடந்த காலங்களில், உங்கள் இயல்பான உள்ளுணர்வால் நீங்கள் கட்டமைத்த சமூக வட்டத்தில் அர்ப்பணிப்புள்ள நண்பர்களே இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்வீர்கள்.

கன்னி

உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன், நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக்கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள், கடமைகளைச் செய்வதற்காக உங்கள் சக்தியைக் கொஞ்சம் சேகரித்துவையுங்கள்.

துலாம்

உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படுவீர்கள். இன்று பல்வேறு ஆதாரங்களிலிருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனத்தை சமநிலையோடு வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்

உங்கள் கற்பனை இன்று அதீத வேகமெடுத்துப் பறக்கும். நீங்கள் உடல் ரீதியாகப் பயணம் மேற்கொள்ளாவிட்டாலும், உங்கள் மனம் அதிவேகத்தில் எல்லைகளைக் கடந்து பயணிக்கும். உங்கள் விருப்பப்படி செயல்பட்டாலும், சிந்தித்துச் செயலாற்றுங்கள். எவ்வாறாயினும், பெரிய நடவடிக்கைகளை எடுக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தனுசு

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளின் தாக்கத்தை தற்போது அனுபவித்துவருகிறீர்கள். ஆனால் இனிமேலும் அது நீடிக்க முடியாது, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உடல் நலத்தைப் பராமரிப்பது அவசியம். ஊக்கத்துடன் வேலைசெய்ய தூண்டும், நற்செய்தியோடு உங்கள் பயணம் தொடங்கும். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுச் செல்லும்.

மகரம்

உணர்ச்சிகளைக் கடந்து, நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கான பாதையைத் தீர்மானிக்கும். உங்கள் உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளால் எதிர்கால வாய்ப்புகளைத் தவறவிடாதீர்கள், ஏனென்றால், உணர்வுப்பூர்வமாக எடுக்கும் முடிவால் ஏற்படும் சேதமானது, சரிசெய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும். இன்று, உங்கள் இயல்பான பணிவான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும்.

கும்பம்

முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உணர்ச்சிகளை முன்னிறுத்தி அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம். பகுத்தறிவு தேவைப்படும் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் போக்கு உங்கள் பாதையில் ஒரு தடையாக மாறும். இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்; இல்லையெனில், அதற்காக அதிக விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

மீனம்

அலுவலகத்தில் நிறைய வேலைகளுடன் மும்முரமாக இருப்பீர்கள். காதல் விஷயத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படும். ஆனால், மாலை நேரத்தில் என்ன நடந்தாலும், அதை முழு மனத்துடன் நீங்கள் வரவேற்க வேண்டும்.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.