ETV Bharat / bharat

COVID 19 : 70 விழுக்காடு உயிரிழப்புக்கு இணை நோய்தான் காரணம்

author img

By

Published : Sep 25, 2021, 12:13 PM IST

Updated : Sep 25, 2021, 12:29 PM IST

கரோனா காரணமாக ஏற்பட்ட 70 விழுக்காடு உயிரிழப்புக்கு இணை நோய்தான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19
COVID-19

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 046 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 76 ஆயிரத்து 319ஆக உயர்ந்தது.

290 நபர்கள் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 46 ஆயிரம் 658 ஆக அதிகரித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

மேலும் இதுவரை 84 கோடியே 89 லட்சத்து 29 ஆயிரத்து 160 நபர்களுக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பகுதி நேர அரசியல்வாதி - அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாக்கு

Last Updated : Sep 25, 2021, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.