ETV Bharat / bharat

3 மாதங்களுக்கு பின் கூடும் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி! என்னென்ன முடிவுகள் எடுக்க உள்ளன? ஒரு அலசல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 5:46 PM IST

டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் அலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி இறுதி செய்யப்பட உள்ளதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய கூட்டணிக்கு அமையவில்லை. மத்திய பிரதேசன், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான திசையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 19ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் 4வது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தேர்தல் அவசர உணர்வு எதிர்க்கட்சிகளிடையே எழுந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் நடைபெறும் 4வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து இறுதி செய்ய திட்டமிட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிரூபம் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக பாட்னா, பெங்களூரு, மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு கிட்டாத நிலையில், டெல்லி கூட்டத்தில் நிச்சயம் முடிவு செய்யப்படுமென அவர் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள உள்ளூர் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் 11 பேர் கொண்ட குழு தொகுதி பங்கீடு பட்டியலை இறுதி செய்யும் என்றும் காங்கிரஸ் எம்.பி சஞ்சய் நிரூபம் தெரிவித்தார்.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் சுமார் 400 இடங்களில் பாஜகவுக்கு எதிராக கூட்டு வேட்பாளர்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொகுதிப் பங்கீடு தவிர்த்து, பொது குறைந்தபட்ச நிகழ்ச்சி நிரலை விரைவாக இறுதி செய்வது குறித்தும் கூட்டணிக் கட்சிகள் ஆலோசிக்கும் என்றும் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த மும்பை சந்திப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஒன்று கூடாத நிலையில் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை குறித்து ஆலோசிக்க உள்ளதாக கட்சி உள்வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதையும் படிங்க : ஊடகத் துறையில் அகலக்கால் பதிக்கும் அதானி குழுமம்! IANS செய்தி நிறுவனத்தை விலைக்கு வாங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.