ETV Bharat / bharat

காவலரின் காலரைப் பிடித்த முன்னாள் மத்திய அமைச்சரால் பரபரப்பு!

author img

By

Published : Jun 16, 2022, 10:40 PM IST

ஹைதராபாத்தில், காவலர் ஒருவரின் காலரைப் பிடித்த முன்னாள் மத்திய அமைச்சரால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலரின் காலரைப் பிடித்த முன்னாள் மத்திய அமைச்சரால் சலசலப்பு!
காவலரின் காலரைப் பிடித்த முன்னாள் மத்திய அமைச்சரால் சலசலப்பு!

ஹைதராபாத் (தெலங்கானா): நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED), ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அனுப்பிய சம்மன்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (ஜூன் 16) தெலங்கானாவில் உள்ள ராஜ்பவனில் “கெராவ் ராஜ் பவன்” என்ற போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி, ராஜ்பவன் நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, ​​ஹைதராபாத் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ​​முன்னாள் மத்திய அமைச்சர், பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டரின் காலரை மிரட்டும் பாணியில் பிடித்தார்.

காவலரின் காலரைப் பிடித்த முன்னாள் மத்திய அமைச்சரால் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து அவரை மகளிர் காவலர்கள் மிகுந்த சலசலப்புக்குப் பிறகு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில் தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி (சிஎல்பி) தலைவர் மல்லு பாட்டி விக்ரமார்கா உள்ளிட்ட பலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிகாரில் ரயிலுக்கு தீ வைத்த இளைஞர்கள்- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.