ETV Bharat / bharat

Live updates - சந்திரயான் 3 - விண்வெளித்துறையின் மகத்தான மைல்கல் - ஜனாதிபதி முர்மு

author img

By

Published : Jul 14, 2023, 2:25 PM IST

Updated : Jul 14, 2023, 4:19 PM IST

chandrayaan 3 mission launch - live updates
chandrayaan 3 mission launch - live updates

16:14 July 14

சந்திரயான் 3 விண்கலம் எப்போது தரையிறங்கும் - இஸ்ரோ தலைவர் பதில்

சந்திரயான் 3 விண்கலம், வெற்றிகரமாக புவியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. அதன் இயக்கம் திருப்திகரமாக உள்ளது. இதே நிலு தொடரும் பட்சத்தில், ஆகஸ்ட் 23ஆம் தேதி, மாலை 05.47 மணிக்கு, விண்கலம் வெற்றிகரமாக, நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

15:59 July 14

சந்திரபாபு நாயுடு வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன்3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ள நிகழ்வு, விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனையானது, பல்வேறு சவால்களை கடந்து வந்த நமது விடாமுயற்சி விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் தெளிவான நிரூபணமாகும். இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு இந்திய நெறிமுறை மற்றும் அறிவியல் முன்னேற்றத்தின் வெற்றியைக் காட்டுவதாக, தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.

15:54 July 14

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம், 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகள், பெருமை மற்றும் நம்பிக்கையை சுமந்து சென்று உள்ளது. சந்திரயான்-3 வெற்றிகரமாக, விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு, நம் அனைவரின் இதயங்களையும் பெருமிதப்படுத்தி உள்ளது. இதற்காக, முயற்சிக்கு நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத நாள். ஜெய் ஹிந்த்! என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ட்விட் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

15:43 July 14

அமித் ஷா வாழ்த்து

சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியா இன்று தனது வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவை தலைமுறை தலைமுறையாகப் போற்றும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க விண்வெளி ஒடிஸியை எழுதும் பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ட்விட் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

15:36 July 14

இஸ்ரோ குழுவிற்கு நம்பி நாராயணன் வாழ்த்து

சந்திரயான் 3 வெற்றிகரமாக ஏவப்பட்ட நிகழ்விற்கு, இஸ்ரோ குழுவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறி உள்ளார்.

15:26 July 14

இந்தியாவிற்கு வாழ்த்துகள் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, புவியின் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிகழ்வில், இந்திய மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் தெரிவித்து உள்ளார்.

15:22 July 14

மகத்தான மைல்கல் - குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு

சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, புவியின் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிகழ்வு, விண்வெளித் துறையின மகத்தான மைல்கல் என்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார்.

15:16 July 14

பிரதமர் மோடி வாழ்த்து

சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, புவியின் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிகழ்வை நிகழ்த்திக் காட்டிய விஞ்ஞானிகள் குழுவிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டு உள்ள மோடி, விஞ்ஞானிகளின் ஓய்வில்லா அர்ப்பணிப்பிற்கு இந்த சாதனை சாட்சி. ஒவ்வொரு, இந்தியரின் கனவை, விண்கலம் சுமந்து சென்று உள்ளதாக, பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

15:10 July 14

சந்திரயான் 3 விண்கலத்தின் இயக்கம் திருப்தி - இஸ்ரோ

பூமியின் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் இயக்கம் திருப்தி அளிப்பதாக, இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

15:07 July 14

அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து

சந்திரயான் 3 விண்கலத்தை, பூமியின் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய விஞ்ஞானிகள் குழுவிற்கு, மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

15:01 July 14

திட பூஸ்டர் பகுதி பிரிந்தது

சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம் 3 ராக்கெட் எம்4 S200 திட பூஸ்டர்கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து உள்ளன

14:56 July 14

நிலவிற்கான பயணத்தை துவக்கியது சந்திரயான் 3 - இஸ்ரோ அறிவிப்பு

நிலவிற்கான பயணத்தை சந்திரயான் 3 விண்கலம் துவக்கி உள்ளதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

14:53 July 14

விண்கலம் நிலைநிறுத்தம்

சந்திரயான் 3 விண்கலம், நீள்வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

14:51 July 14

சந்திரயான் 3 - வெற்றிப் பயணம்!

சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் 3 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன.

14:40 July 14

நிலவை நோக்கிய பயணத்தை துவக்கியது சந்திரயான் 3

சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக 2.35 மணிக்கு நிலவை நோக்கி விண்ணில் சீறிப்பாய்ந்தது.

14:36 July 14

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் 3

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் 3

14:35 July 14

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் 3

14:32 July 14

இஸ்ரோ தலைவர் வருகை

இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கு முன்னதாக மிஷன் கன்ட்ரோல் மையத்திற்கு வருகை தந்து உள்ளார்.

14:25 July 14

சந்திரயான் 3 - பிரதமர் மோடி வாழ்த்து

சந்திரயான் 3 விண்கலம், இந்தியாவின் கனவை சுமந்து செல்வதாக, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

14:09 July 14

ISRO

சந்திரயான் 3 விண்கலம், இன்னும் சில நிமிடங்களில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட உள்ளது.

Last Updated : Jul 14, 2023, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.