ETV Bharat / bharat

Telugu People with Ramoji Rao: ராமோஜி ராவ்-க்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு!

author img

By

Published : Aug 21, 2023, 4:51 PM IST

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, ஈநாடு (Eenadu) குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத் (தெலங்கானா): ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈநாடு குழுமத்தின் தலைவரான ராமோஜி ராவ்-க்கு சொந்தமான மார்கதர்சி சிட் பண்ட்ஸ் பிரைவட் லிமிடெட் (Margadarsi Chit Funds Pvt Ltd) மீது ஆந்திர சிஐடி 3 வழக்குகளை பதிவு செய்து உள்ளது.

இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் மோசமான செயல்களை அமல்படுத்தியதற்காக ஈடிவி நெட்வொர்க் குழுமத்திற்கு ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அரசு களங்கம் ஏற்படுத்துவதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான என் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

  • Continuing his tendency to dismantle institutions, YS Jagan is now trying to raze down media - the fourth pillar of democracy. Like a dictator, he favors media that praises him and harasses and intimidates media like Eenadu that exposes YSRCP’s scams and dirty deeds. Driven by… pic.twitter.com/XfPOA2dnr2

    — N Chandrababu Naidu (@ncbn) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டு உள்ள ‘X' சமூக வலைதளப் பதிவில், “நிறுவனத்தை சிதைக்கும் தனது போக்கைத் தொடர்ந்து, ஜனநாயகத்தின் 4வது தூணான ஊடகத்தையும் தகர்ப்பதற்கு ஒய்.எஸ்.ஜெகன் முயற்சி செய்து வருகிறார். ஒரு சர்வாதிகாரியைப் போன்று, தனக்கு ஆதரவாக இருக்கும் ஊடகங்களை ஆதரிக்கும் ஒய்.எஸ்.ஜெகன், ஈநாடு போன்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் மோசமான செயல்களை அமல்படுத்தும் ஊடகங்களை துன்புறுத்தி மிரட்டுகிறார்.

தனது சொந்த தோல்விகளாலும், மக்களிடையே உள்ள கடுமையான பதவி எதிர்ப்புகளாலும் உந்தப்பட்டு, மார்கதர்சி போன்ற நீண்ட கால அமைப்புகளை குறி வைத்து, 60 ஆண்டுகளாக தெலுங்கு மக்களுக்கு பணிவுடன் சேவை செய்து, தனது சொந்தத்தைப் போலல்லாமல், கறைபடாத நற்பெயரைக் கொண்டவர், ராமோஜி ராவ். நேர்மை, மதிப்புகள் மற்றும் கொள்கைகள் கொண்ட ராமோஜி ராவ் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடத்திய தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது, பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவரது பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது. ஒய்.எஸ்.ஜெகனின் பல தீய எண்ணம் கொண்ட முயற்சிகள் இருந்தபோதிலும், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியடைந்து விடுவார். ஏனென்றால், தீமை எப்போதும் தோற்றுவிடும். நன்மை எப்போதும் போன்று இறுதியில் வென்று விடும்” என தெரிவித்து உள்ளார்.

இந்த வலைதளப் பதிவில் #TeluguPeopleWithRamojiRao என்ற ஹேஷ்டேக்கையும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் இருந்து ராமோஜி ராவ் பத்ம விபூஷன் விருதப் பெறும் புகைப்படத்தையும் சந்திரபாபு நாயுடு பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ராஜீவ் காந்தி எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரர்" - சோனியா காந்தி புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.