ETV Bharat / bharat

கால்நடை தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 11:00 PM IST

Bihar fodder scam: ஒருங்கிணைந்த பீகாரில் 1900 முதல் 1995 ஆண்டுகளில் நடந்த கால்நடை தீவன மோசடி வழக்கில், ஜார்கண்ட் மாநிலத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள் அன்று 52 பேருக்கு சிறை தண்டனை உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

கால்நடை தீவன ஊழல் வழக்கு
கால்நடை தீவன ஊழல் வழக்கு

ராஞ்சி (ஜார்கண்ட்): சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள் அன்று கால்நடைகளின் தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உட்படப் பல தண்டனைகள் வித்து உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் ஸ்ரீவஸ்தவ் உத்தரவிட்டுள்ளார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள் அன்று தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்து உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் ஸ்ரீவஸ்தவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு, அப்போதைய ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் டொராண்டா, தியோகர், தும்கா மற்றும் சாய்பாசா ஆகிய பகுதிகளில் இருக்கும் கருவூலத்திலிருந்து, 1990 முதல் 1995 இடையிலான காலகட்டத்தில் 36.59 கோடி மோசடி செய்யப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் குமார் தண்டனைகள் குறித்த விபரம் செப்டம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய பிரமுகர்களுள் ஒருவர். தற்போது அவர் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தற்காலிக ஜாமீன் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: திருடன் என நினைத்து இளைஞர் அடித்துக் கொலை - மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.