ETV Bharat / bharat

சூடு பிடிக்க தொடங்கிய ‘மார்க் ஆண்டனி’ விவகாரம் - மும்பை சென்சார் போர்டு மீது சிபிஐ விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 2:29 PM IST

Updated : Oct 5, 2023, 2:54 PM IST

CBI registers case against Mumbai CBFC officials (Mark Antony Movie Issue): நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு லஞ்சம் கேட்டதாக தெரிவித்த புகாரை, சிபிஐ விசாரணைக்கு எடுத்துள்ளதாக "X" பக்கத்தில் தெரிவித்துள்ளது.

cbi-registers-case-against-mumbai-cbfc-officials-over-complaint-filed-by-actor-vishal
சூடு பிடிக்க தொடங்கிய ‘மார்க் ஆண்டனி’ விவகாரம் - மும்பை சென்சார் போர்டு மீது சிபிஜ விசாரணை!

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வரவேற்பை அடுத்து, இந்தியில் வெளியிட படக்குழு முடிவு செய்து, இந்தியில் இப்படம் வெளியிடப்பட்டது.

  • CBI REGISTERS CASE AGAINST THREE PRIVATE PERSONS & OTHERS ON THE ALLEGATIONS OF BRIBERY AND CONDUCTS SEARCHES pic.twitter.com/0k8HvjFtEB

    — Central Bureau of Investigation (India) (@CBIHeadquarters) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில்தான் ‘மார்க் ஆண்டனி’ இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு லஞ்சம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார். அதில், “மார்க் ஆண்டனி இந்தி படத்தை வெளியிட ரூ.6.5 லட்சம் கேட்டனர். 3 லட்சம் படத்தைத் திரையிடவும், 3.5 லட்சம் சான்றிதழ் வழங்கவும் கேட்டனர். எனது திரை வாழ்வில் இது போன்ற ஒன்றை நான் எதிர்கொண்டதில்லை” என அந்த வீடியோ பதிவில் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: “பிக்பாஸில் வயதானவர்களை முதலில் அனுப்பிவிடுவார்கள்” - வனிதா விஜயகுமார் கூறியது என்ன?

இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ "X" பக்கத்தில், மும்பை தணிக்கைத் துறை (CBFC) ஊழல் விவகாரம் நடிகர் விஷால் மூலம் முன்வைக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்த ஊழலை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், “இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து மும்பை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி செப்.29 அன்று மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் CBI (மத்திய புலனாய்வுப் பிரிவு) "X" பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், மும்பை சென்சார் போர்டு மீதான புகாரின் பேரில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பொது ஊழியர்கள், தனி நபர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர் மாதம் இந்தியில் டப் செய்த திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் கொடுப்பதற்கு ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டு, பின்னர் ரூ.6,54,000 லட்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் வங்கிக் கணக்குகள் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர் என நான்கு வெவ்வேறு இடங்களில் சோதனை செய்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், மேலும் அவர்களுக்கு எதிரான ஆவணங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை தொடர்வதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீண்ட காத்திருப்புக்கு பிறகு லியோ படத்தின் த்ரிஷா போஸ்டர் வெளியீடு!

Last Updated : Oct 5, 2023, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.