ETV Bharat / bharat

மேற்கு மகாராஷ்டிராவில் தித்திக்கும் இனிப்புச்சுவையை உணருமா சந்திர சேகர ராவ் கட்சி?

author img

By

Published : Jun 27, 2023, 5:21 PM IST

சர்க்கரை ஆலைகள் நிறைந்த மேற்கு மகாராஷ்டிரா பகுதியில், களம் பதிக்க நினைத்து இருக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கு, தித்திக்கும் முடிவுகள் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Can KCR make electoral gains in Maharashtra sugar belt?
மேற்கு மகாராஷ்டிராவில் தித்திக்கும் இனிப்புச் சுவையை உணருமா சந்திர சேகர ராவ் கட்சி?

மும்பை (மகாராஷ்டிரா): மேற்கு மகாராஷ்டிரா தொகுதியில் உள்ள வாக்காளர்கள், இந்துத்துவா எண்ணம் கொண்டவர்கள் ஆவர். தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மனநிலை, அப்பகுதி மக்களுக்கு ஒத்துப்போகும் வாய்ப்பு இல்லாததால், அங்கு அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைப்பது சந்தேகம் தான் என்று சிவ சேனா (ஷிண்டே) கட்சி பிரமுகர் தெரிவித்து உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் மிக்க அந்தப் பகுதியில், கேசிஆர் கட்சியால் சோபிக்க முடியுமா என்பதே, தற்போதைய விவாதப்பொருளாக மாறி உள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ள மேற்கு மகாராஷ்டிரா பகுதியில், தனது கட்சியின் கால்தடத்தைப் பதிக்க, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் திட்டமிட்டு உள்ளார். இந்தப் பகுதியின், நடப்பு அரசியல்வாதிகளுக்கு, சந்திர சேகர ராவ், மிகுந்த சவாலாக இருப்பார் என்ற ஊகங்கள் உள்ளபோதிலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னணி அரசியல் கட்சிகள், சந்திர சேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதியின் (BRS) பிரவேசம், இந்த பிராந்தியத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்து உள்ளன.

சமீபகாலமாக, மேற்கு மகாராஷ்டிராவில் தனது எல்லையை விரிவுபடுத்த, அங்கு உள்ள உள்ளூர் தலைவர்களைக் கவருவதற்கு சந்திர சேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி முயற்சித்து வருகிறது. இதற்காக, மராத்வாடாவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அல்லது முந்தைய சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் இரண்டாம்இடம் பிடித்தவர்களைக் கவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள 119 கூட்டுறவுத் தொழிற்சாலைகளில், 75 சர்க்கரை ஆலைகள் இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ளதால், மேற்கு மகாராஷ்டிரா, சர்க்கரை பெல்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலானவை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைச் சுற்றியே இந்தப் பகுதியில் அரசியல் இயங்கி வருகிறது.. பந்தர்பூரில் உள்ள விட்டல் கூட்டுறவு சர்க்கரை ஆலை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தொழிற்சாலையின் தலைவராக மறைந்த என்சிபி எம்எல்ஏ பாரத் பால்கேவின் மகன் பகீரத் பால்கே இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த பால்கே மீது, அவரது கட்சித் தலைமை அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்கு மகாராஷ்டிரா தொகுதியில்சந்திர சேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி நுழைவு குறித்து சிவசேனா (ஷிண்டே) செய்தித் தொடர்பாளர் சஞ்சீவ் போர் பாட்டீல் கூறியதாவது, 'பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு வித்தியாசமான சிந்தனை உள்ளது. இந்துத்துவாவுக்கும், அக்கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதேசமயம், இந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்கள் இந்துத்துவா எண்ணம் கொண்ட வாக்காளர்கள் என்பதால், பாரத ராஷ்டிர சமிதி கட்சியால், எந்த விதத்திலும் இங்கு ஊடுருவ முடியாது. மகாராஷ்டிராவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்குச் செல்லும் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஏனெனில் அவர்கள் தான் தற்போது, அதிருப்தியில் இருக்கின்றனர்’ என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மகாராஷ்டிராவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் காகா பாட்டீலிடம், பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் மகாராஷ்டிராவில் வந்து குடியேற முயற்சி செய்தனர். , ஆனால், அவர்கள் யாரும் இங்கு வெற்றிபெற முடியவில்லை. அவர்கள் குடை போல் இருக்கிறார்கள், இப்போது பருவமழை தொடங்கிவிட்டது, எனவே மகாராஷ்டிராவில் இதுபோன்ற குடைகள் எங்கும் காணப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் மகாராஷ்டிர மக்களோ அல்லது முன்னணி தலைவர்களோ பாரத ராஷ்டிர சமிதிக்கு செல்வார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதுபோன்ற குடைகளை நாடுபவர்கள் விரைவில் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு அந்தந்த கட்சிகளுக்கு விரைவில் திரும்புவார்கள்’ என்று காகா பாட்டீல் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார் - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.