ETV Bharat / bharat

ரூ.41,000க்கு டீ-சர்டா..? :ராகுலின் டீ-சர்ட் விலை குறித்து விமர்சித்த பாஜக!

author img

By

Published : Sep 9, 2022, 5:54 PM IST

Updated : Sep 9, 2022, 6:31 PM IST

காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர் ராகுல் காந்தி அணிந்திருக்கும் டீ-சர்ட் ரூ.41,000 என பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது.

ரூ.41,000க்கு டீ-சர்டா..? :ராகுலின் டீசர்ட் குறித்து விமர்சித்த பாஜக
ரூ.41,000க்கு டீ-சர்டா..? :ராகுலின் டீசர்ட் குறித்து விமர்சித்த பாஜக

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பாத யாத்திரையைத் தொடங்கிய காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, யாத்திரையில் அணிந்திருக்கும் டீ-சர்ட் ரூ.41,000 என பாஜக விமர்சித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பக்கம் ராகுல் காந்தியின் புகைப்படமும், அதன் மறுபக்கத்தில் அவர் அணிந்திருக்கும் டீ-சர்ட்டின் விலையினையும் குறிப்பிட்டுள்ள படத்தையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளனர்.

புளூபெரி(Blue berry) எனும் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த டீ-சர்ட்டின் விலை, ரூ.41,257 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மறுபக்கம் காங்கிரஸ் கட்சியினர் எதிர்வாதம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், பாஜக இந்த யாத்திரையால் சோகமடைந்துள்ளது, இந்த ட்வீட்டின் மூலம் தெரிகிறது என்றார். மற்றொருவர், அது ராகுல் காந்தியின் சொந்த பணமென்றும், மக்கள் பணத்தில் ராகுல் காந்தி ஆடை அணியவில்லை என்றும் எதிர்வினையாற்றியுள்ளார்.

இந்த யாத்திரையின் ஒருபகுதியாக (செப்.8) கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'தான் இந்த யாத்திரையை வழிநடத்தவில்லை. தானும் இதில் ஒரு பங்காளன் மட்டுமே' எனத் தெரிவித்தார். மேலும், 'பாஜக - ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் விதைத்த வெறுப்பு மனநிலையை சரி செய்வது தான், இந்த யாத்திரையின் நோக்கம்’ என்றும் தெரிவித்துக்கொண்டார்.

இதையும் படிங்க: சோனாலி போகத் வழக்கு: ஹோட்டலை இடிக்கும் பணி தொடக்கம்...

Last Updated : Sep 9, 2022, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.