ETV Bharat / bharat

பாஜகவில் அதிரடி மாற்றம்... 2024 நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

author img

By

Published : Jul 4, 2023, 6:01 PM IST

Updated : Jul 4, 2023, 6:21 PM IST

2024 மக்களவை தேர்தல், தெலங்கானா, மிசோரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களை கருத்தில் கொண்டு பல்வேறு மாநில கட்சித் தலைமைகளில் பாஜக மாற்றம் கொண்டு வந்து உள்ளது.

BJP
BJP

டெல்லி : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் தலைவர்களை மாற்றி பாஜக நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

தெலங்கானா பாஜக தலைவராக இருந்த பந்தி சஞ்சய் குமாருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியை மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்து உள்ளது. அதேபோல் பஞ்சாப் பாஜக தலைவராக சுனில் ஜக்கர், ஜார்கண்ட் மாநில பாஜக தலைவராக பபுலால் மரண்டி, ஆந்திர பிரதேசத்திற்கு டி புரண்டேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நடப்பாண்டு இறுதிக்குள் தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தெலங்கான பாஜக தலைவராக இருந்த பந்தி சஞ்சய் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். ஒபிசி சமூக தலைவர் எட்லா ராஜேந்தர், தெலங்கானா தேர்தல் நிர்வாகக் குழு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளதாக பாஜக தலைமை தெரிவித்து உள்ளது.

தெலங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமாருக்கு எதிராக மாநில அரசியலில் நிலவும் எதிர்ப்பு மற்றும் மாநிலத்தில் கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் விரைவில் மறுசீரமைக்கப்பட உள்ள மத்திய அமைச்சரவையில் பந்தி சஞ்சாய் குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் ஆந்திர பிரதேச மாநில பாஜக தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி. புரண்டேஸ்வரி நியமிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாப் பாஜக தலைவராக இருந்த அவானி சர்மாவுக்கு பதிலாக சுனில் ஜக்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். சுனில் ஜக்கர் கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த அண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசியலில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள இந்த தலைவர்கள் மாற்றத்தை பாஜக மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : "பயங்கரவாதம் குறித்து இரட்டை பேச்சு.." பாக். பிரதமரின் வாயை அடைத்த பிரதமர் மோடி!

Last Updated : Jul 4, 2023, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.