ETV Bharat / bharat

ட்விட்டரில் மல்லுக்கட்டும் பாஜக - ஆம் ஆத்மி! பேசு பொருளாக மாறிய ஆம் ஆத்மி எம்பியின் புகைப்படம்!

author img

By

Published : Jul 26, 2023, 9:01 PM IST

ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா தலையில் காகம் கொத்திச் சென்ற போன்ற புகைப்படங்களை டெல்லி பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், அதற்கு ராகவ் சத்தா பதிலடி கொடுத்து உள்ளார்.

Raghav Chadha
Raghav Chadha

டெல்லி : நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தா தலையில் காகம் கொத்திச் சென்ற போன்ற புகைப்படங்களை டெல்லி பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகுல் சத்தா, நாடாளுமன்ற கூட்டம் முடிந்து செல்போனில் பேசியவாறு வெளியே வந்த போது எதிர்பாராத விதமாக காகம் ஒன்று அவர் தலையை தாக்கி விட்டு பறந்தது. இதனால் சற்று நிலைகுழைந்த ராகவ் சத்தா பின்னர் நிதானமடைந்து சென்றார். இந்நிலையில் ராகவ் சத்தாவை காகம் கொத்தும் புகைப்படங்களை ஒன்றிணைத்து டெல்லி பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

டெல்லி பாஜக தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தாவின் புகைப்படங்களை வெளியிட்டு, "பொய் சொன்னால் காகம் உன்னை கொத்தும் என்பதை இதுவரைக்கும் கேள்விப்பட்டு இருந்தோம், ஆனால் இன்றைக்குக் காகம் ஒரு பொய் கூறுபவரை கொத்துவதை நேரடியாக பார்த்தோம்" என்று பதிவிட்டு உள்ளது.

இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கலவையான விமர்சனம் வெளியிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி சற்று நேரத்தில் வைரலானது. இந்நிலையில் பாஜகவின் பதிவுக்கு ராமாயணத்தை எடுத்துக் காட்டாக கூறி ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா ரீ டீவிட் செய்து உள்ளார்.

அந்த பதிவில் ராம்சந்திரார் சீதாவிடம், அன்னம் தானியத்தைக் கடிக்கும் போது காகம் முத்துக்களை உண்ணும் ஒரு காலம் மனிதர்களுக்கு வரும் என்று பதிவிட்டு உள்ளார். மேலும் இதுவரை கேள்விப்பட்ட ஒன்றை இன்று நேரில் பார்த்தாக ராகவ் சத்தா அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

இந்திய தேசிய வளர்ச்சிகான ஒருங்கிணைந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு பிரதமர் மோடியை கோரி வருகின்றன.

இதனால் சமூக வலைதளங்களில் சற்று மந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், டெல்லி பாஜக மற்றும் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சத்தாவின் ட்வீட்டுகள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதேநேரம் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா, காங்கிரசின் ரஞ்சீத் ரஞ்சன் மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க அழைப்பு விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உடனடி விவாதம்.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.