ETV Bharat / bharat

விஸ்வரூபம் எடுக்கும் பறவை காய்ச்சல்... 13,000 வாத்துகள் இறப்பு...

author img

By

Published : Dec 10, 2021, 3:18 PM IST

Updated : Dec 10, 2021, 3:27 PM IST

கேரளாவின் ஆலப்புழாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் இதுவரை 13,000 பறவைகள் உயிரிழந்துள்ளன.கேரளாவின் ஆலப்புழாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் இதுவரை 13,000 பறவைகள் உயிரிழந்துள்ளன.

Bird flu  in Alappuzha, கேரளாவில் பறவை காய்ச்சல்
கேரளாவில் பறவை காய்ச்சல்

திருவனந்தப்புரம்: கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள தக்கழி சுற்றுவட்டரப் பகுதிகளில் சில நாள்களாக 1,000 மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ளன. இதனால், அப்பகுதி கால்நடை மருத்துவர்கள் இறந்த வாத்துகளின் மாதிரிகளை போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பரிசோதனை முடிவில் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள அனைத்து பறவைகளையும் அழிக்கும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், நெடுமுடி பகுதியில் 8,000க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துவிட்டன.

அப்படி மொத்தமாக 13,000 வாத்துகள் உயிரிழந்துள்ளன. இந்த வைரஸ் காற்றின் மூலம் மற்ற பறவைகளுக்கும் பரவக்கூடும் என்பதால், ஆழப்புலாவில் உள்ள ஒட்டுமொத்த பறவைகளையும் அழிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஜூலை மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் - பலியான 12 வயது சிறுவன்

Last Updated : Dec 10, 2021, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.