ETV Bharat / bharat

விஷ்வ இந்து மகா சபா மாநிலத் தலைவருக்கு துப்பாக்கிச் சூடு

author img

By

Published : Feb 2, 2020, 4:26 PM IST

Updated : Feb 2, 2020, 4:47 PM IST

உத்தரப் பிரதேசம்: லக்னோவில் விஷ்வ இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விஷ்வ இந்து மகாசபா மாநில தலைவருக்கு துப்பாக்கிச் சூடு
விஷ்வ இந்து மகாசபா மாநில தலைவருக்கு துப்பாக்கிச் சூடு

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் விஷ்வ இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் இன்று காலை தனது உறவினரான ஆதித்யா ஸ்ரீவத்சாவுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ரஞ்சித் பச்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.

இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் பச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஸ்ரீவத்சா படுகாயமடைந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லக்னோ காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஞ்சித் பச்சன் விஷ்வ இந்து மகா சபாவில் சேர்வதற்கு முன்பு, சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். இவர் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

சிஏஏ போராட்டத்தில் சர்ச்சை பேச்சு; உ.பி. மருத்துவர் கைது

Last Updated : Feb 2, 2020, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.