ETV Bharat / bharat

கரோனா லாக்டவுன் காலத்தில் நீதிமன்றம் எப்படி செயல்படுகிறது?

author img

By

Published : May 30, 2020, 3:43 PM IST

ஜம்மு-காஷ்மீர்: கரோனா லாக்டவுன் காலத்தில் அனைத்து நடவடிக்கையும் முடங்கியுள்ள நிலையில், நீதிமன்றங்கள் மெய்நிகர் தொழில்நுட்பம் என்ற ஆன்லைன் வழியில் இயங்குகின்றன. இதில் பங்கேற்ற அனுபவத்தை ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தின் நிருபர் பகிர்ந்துகொள்கிறார்.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/29-May-2020/7394056_38_7394056_1590745435491.png
http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/29-May-2020/7394056_38_7394056_1590745435491.png

கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுமையாக முடக்கியுள்ள நிலையில், இந்திய நீதிமன்றத்தின் அன்றாட பணிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றங்களின் செயல்பாட்டிற்கான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுடன், பல முக்கியமான வழக்குகள் மெய்நிகர்(Virtual) நீதிமன்ற அறையில் நீதிபதிகள், மனுதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் நடத்தப்படுகின்றன.

காஷ்மீர் பார் அசோசியேஷன் தலைவர் மியான் அப்துல் கயூம் 370 மற்றும் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்ட உடனேயே, கடந்த ஆண்டு அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் (பி.எஸ்.ஏ.) கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி தன்னை விடுவிக்கக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கின் முக்கியமான நீதிமன்ற நடவடிக்கைக்கு சாட்சியாக ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தின் நிருபர் பங்கேற்றார்.

அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம்: ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் வீடியோ நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது,. இது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயன்பாடாகும். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பகிர அனுமதிக்கிறது. மனுதாரர் ஒரு மெய்நிகர் நீதிமன்ற அறைக்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் வீடியோ அல்லது கால் கான்பரன்சிங் மூலம் நடத்தப்படுமா என்பது நீதிபதியின் விருப்பம். கயூம் அவரது வழக்கில், வீடியோ கான்பரன்சிங் அங்கீகரிக்கப்பட்டது. சில நேரங்களில் இணையத்தின் இணைப்பு மோசமாக இருக்கிறதா என மறுபரிசீலனை செய்யப்படுகின்றன.

முந்தைய விசாரணைகளிலும் இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொண்டோம். முழு நடவடிக்கைகளுக்கும் சாட்சியம் அளிக்க பத்திரிகையாளர்கள் அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு அனுமதி உள்ளது. அவர்கள் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை, ஆனால் ஆடியோ மற்றும் பிற விவரங்களை பதிவு செய்யலாம். அதேவேளை, இவர்கள் அனைவரும் தகுந்த இடைவெளி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மியான் அப்துல் கயூம் வழக்கில், நீதிபதி அலி முஹம்மது மக்ரே மற்றும் நீதிபதி வினோத் சாட்டர்ஜி கவுல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் அமர்வு காலை 11 மணிக்கு தீர்ப்பை அறிவிக்க திட்டமிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளை நீதிமன்றம் முன்னதாக மே 18 அன்று முடித்திருந்தது.

வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் கறுப்பு உடைகளில், அவர்கள் நீதிமன்றத்தில் இருப்பதைப் போல தோன்றினர். ஒரே வித்தியாசம் பெரிய காகித ஆவணங்களுக்கு பதிலாக ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பென் டிரைவ்கள் எளிதாக பயன்படுத்தப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கும் போது தொலைபேசிகளை Airplane மோடில் வைத்திருக்க வேண்டும், தேவையான தூர நேரத்திற்கு அமைதியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நீதிபதி கவுல் வழக்கின் இறுதி தீர்ப்பை அறிவித்தார். அப்போது, ​​ஜாஃபர் ஷா மற்றும் பிற வழக்கறிஞர்கள் தீர்ப்பில் மறுவாதம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மியான் கயூமின் சட்டக் குழு எழுப்பிய எந்த விஷயத்தையும் அமர்வு கருத்தில் கொள்ளவில்லை.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனே, பதற்றமடைந்த மூத்த வழக்கறிஞர் நாங்கள் வழக்கைத்தான் இழந்தோம். தவிர, இன்னும் வேறு வழிகளைத் தேடுவோம். எங்கள் அடுத்த நடவடிக்கையை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: நச்சில்லா உணவு உற்பத்தியை நோக்கி இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.