ETV Bharat / bharat

பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

author img

By

Published : Dec 10, 2019, 9:09 PM IST

டெல்லி: பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது அடிப்படை உரிமைகள் தோல்விடைவதைக் காட்டுகிறது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Prez
Prez

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராட்டி பேசிய அவர், "கால் நூற்றாண்டு காலமாகக் கண்காணிப்பு அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டுவருகிறது. எதிர்பார்த்ததைவிட பாரபட்சமின்றியும் அச்சமின்றியும் அது செயல்பட்டுவருகிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் முயற்சியாக மனித உரிமைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஐநா வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான சாசனம் ஆகியவற்றை வகுப்பதில் ஹன்சா மேத்தா பெரும் பங்காற்றினார். ஐக்கிய மனித உரிமைகள் தொடர்பான சாசனம் போன்று ஆண்கள் உரிமை சாசனம் அங்கீகாரம் பெருவதற்கு ஹன்சா மேத்தா முக்கிய பங்காற்றினார். மனித உரிமைகளுக்காக அவர் ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் விதமாக ஹன்சா மேத்தாவை உலகின் முதல் பெண்மணி எனக் குறிப்பிடுகிறோம்.

பெண்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துவருவது மனித உரிமைகள் தோல்வியடைவதைக் காட்டுகிறது. இதன்மூலம் அடிப்படை கடமைகளை நாம் செய்ய தவறியது தெரியவந்துள்ளது. மனித உரிமைகள் குறித்த தேசிய அளவிலான விவாதம் அடிப்படை கடமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: போட்டிக்கிடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனை: 'தாய்மை'யின் மகத்துவத்தை உணர்த்திய புகைப்படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.