ETV Bharat / bharat

9.5 லட்சம் தொழிலாளர்களுக்குப் பணி: உ.பி. அரசு அறிவிப்பு!

author img

By

Published : May 29, 2020, 11:31 AM IST

லக்னோ: 9.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் முயற்சியாக இன்று (மே 29) ஐ.ஐ.ஏ., சி.ஐ.ஐ., நாரெட்கோ ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU ) கையெழுத்திட உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

MoU for employment
MoU for employment

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிவருகின்றனர்.

இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் வேலை வழங்குவதால் மட்டுமே அவர்களது வாழ்வாதாரத்தைச் சரிசெய்ய முடியும் என நினைத்த உத்தரப் பிரதேச அரசு புது முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.

அதன்படி 9.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் முயற்சியாக, இன்று (மே 29) ஐ.ஐ.ஏ., சி.ஐ.ஐ., நாரெட்கோ ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட உள்ளதாக அம்மாநில தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் எனவும் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்... கௌதம் அதானியின் கரோனா கால திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.