ETV Bharat / bharat

'உ.பி. அரசு விவசாயிகளை துன்புறுத்த புதிய வழிகளை வகுத்துள்ளது' -பிரியங்கா காந்தி

author img

By

Published : Oct 9, 2019, 12:51 PM IST

டெல்லி: கனமழைக்கான இழப்பீட்டுத் தொகையினை வழங்காமல் விவசாயிகளைத் துன்புறுத்த புதிய வழிகளை உத்தரப் பிரதேச அரசு வகுத்துள்ளதாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

UP governmenthas devised many ways to harass the farmers says priyanka gandhi

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் உ.பி. மாநில அரசு விவசாயிகளை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது பதிவில், 'உத்தரப் பிரதேச அரசு விவசாயிகளை துன்புறுத்த பல புதிய வழிகளை வகுத்துள்ளது. கடன் தள்ளுபடி என்ற பெயரில், விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிவருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

UP governmenthas devised many ways to harass the farmers says priyanka gandhi
ட்விட்டர் பக்கத்தில் பாஜக அரசை விமர்சித்த பிரியங்கா காந்தி

மேலும், 'தற்போது ஏற்பட்ட கனமழைக்கு இழப்பீடு அளிக்கப்படாமல் தொடர்ந்து அவர்கள் வஞ்சிக்கப்பட்டுவருகின்றனர் என்ற அவர், உத்தரப் பிரதேசத்திலுள்ள பாரதிய ஜனதா அரசு விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவில்கொள்கிறது' என சாடியுள்ளார்.

இதையும் படிங்க: சின்மயானந்தா மீதான பாலியல் வழக்கு: களத்தில் பிரியங்கா காந்தி!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.