ETV Bharat / bharat

புர்கா அணிந்ததால் வெளியேற்றம்; தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!

author img

By

Published : Dec 23, 2019, 8:18 PM IST

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திருப்பி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

University Student Returns her Gold Medal
University Student Returns her Gold Medal

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்தவர் ரபியா. இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தங்கப்பதக்கம் பெற இருந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழக நேரு ஆடிட்டோரியத்தில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

மாணவி ரபியா
மாணவி ரபியா

இந்நிலையில் குடியரசுத் தலைவர் வருவதற்கு முன்னதாக மாணவி ரபியா காவல் துறையினரால் காரணமின்றி வெளியே அனழத்து செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் வந்து சென்ற பின்னரே மாணவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார்.

மாணவி ரபியா
மாணவி ரபியா

பின்னர் இவர் மேடையில் ஏறி சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு, தங்கப்பதக்கத்தை வாங்குவதை தவிர்த்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நான் புர்கா அணிந்து இருந்ததால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றபட்டேன் என்றும் ஆதங்கப்பட்டார்.

மாணவி ரபியா
தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபியா

இதையும் படிங்க: பெண்கள் அதிகமாக பட்டம் பெற்றிருப்பது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கிறது: ராம்நாத் கோவிந்த்!

Intro:புதுவை பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Body:புதுவை பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

கேரள மாநிலம் கோழக்கோடு நகரத்தை சேர்ந்தவர் ரபஹ, இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தங்க பதக்கம் பெற இருந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழக நேரு ஆடிட்டோரியத்தில் அமரப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி வருவதற்கு முன்னதாக அவர் போலிசாரால் காரணமின்றி வெளியே அனழத்து செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜனாதிபதி வந்து சென்ற பின்னரே குறிப்பிட்ட மானவி நிகழ்வு அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இவர் மேடையில் ஏறி சான்றிதழ் மட்டும் பெற்றுக்கொண்டு, தங்க பதக்கத்தை வாங்குவதை தவிர்த்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நான் இஜாப்பை அனிந்து இருந்த்தால்தான் அரங்கைவிட்டு வெளியேற்றபட்டனே என்றும் அவர் ஆதங்கப்பட்டார்..Conclusion:புதுவை பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திரும்ப அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.