ETV Bharat / bharat

மோசடியில் ஈடுபடும் ரிபப்ளிக் டிவி: வெளுத்து வாங்கிய மும்பை காவல்துறை!

author img

By

Published : Oct 9, 2020, 2:17 AM IST

மும்பை: வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து ரிபப்ளிக் உள்பட 3 சேனல்கள் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Mumbai police
Mumbai police

தொலைக்காட்சியின் பார்வையாளர்களை கணக்கிட டிஆர்பி ரேட்டிங் உதவுகிறது. இதனை வைத்தே தொலைக்காட்சியின் பிரபலத்தை மக்கள் அறிகிறார்கள். இதன் அடிப்படையிலேயே, விளம்பர வருவாய் அதிகரிக்கிறது.

இந்நிலையில், வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து ரிபப்ளிக் உள்பட 3 சேனல்கள் மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில், ஒரு கும்பல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவல் ஆணையர் பரம் வீர் சிங், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மும்பை காவல்துறை மீதும் மகாராஷ்டிரா அரசின் மீதும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டது. அதுவே டிஆர்பி மோசடியில் ஈடுபட்டது. இதனை துப்பறிவு குற்ற பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக 2 மராத்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியில் ஈடுபட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திருமணத்தை தாண்டிய உறவினால் மகனை கொன்ற தாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.