ETV Bharat / bharat

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு, முடிவை வாபஸ் பெற மம்தா வலியுறுத்தல்

author img

By

Published : Jul 7, 2020, 5:56 AM IST

கொல்கத்தா: 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டு (தபால் வாக்கு) குறித்த முடிவை வாபஸ் பெறுமாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

TMC urges EC to withdraw decision  postal ballots for voters aged above 65  TMC urges EC to withdraw decision on postal ballots  தபால் வாக்கு  மம்தா பானர்ஜி  எதிர்ப்பு  Mamata Banerjee
TMC urges EC to withdraw decision postal ballots for voters aged above 65 TMC urges EC to withdraw decision on postal ballots தபால் வாக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு Mamata Banerjee

65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டு (தபால் வாக்கு) குறித்த முடிவை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க அனுமதிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் இது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.

மேலும் இது, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்தை விதிகளை மீறும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்தை எதிர்க்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக குறைபாடுகள் உள்ளவர்கள், 80 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் போது அஞ்சல் வாக்குச்சீட்டைத் தேர்வுசெய்ய அனுமதிக்கும் வகையில், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்ட அமைச்சகம் தேர்தல் விதிகளை திருத்தியது.

இந்நிலையில் ஜூன் 19 தேதியன்று, அமைச்சகம் விதிகளில் புதிய மாற்றத்தை அறிவித்தது. அது 65 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனப் பொருள்கள் புறக்கணிப்பு: ராக்கி தயாரிப்பில் களமிறங்கிய மாணவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.