ETV Bharat / bharat

பிரதமர், உள் துறை அமைச்சருடன் தமிழிசை சந்திப்பு

author img

By

Published : Oct 15, 2019, 10:28 PM IST

Updated : Oct 16, 2019, 1:12 AM IST

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழிசை பிரதமரையும் உள் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார்.

Tamilisai Soundararajan

தெலங்கானாவில் சம்பள உயர்வு, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக மாற்றுவது, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை முன்னிறுத்திக் கடந்த 5ஆம் தேதி முதல் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசு குறித்த நாள்களுக்குள் பணிக்குத் திரும்பாததால், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கிட்டத்தட்ட 50 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

இது தொடர்பான போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. போக்குவரத்து சங்கங்களின் போராட்டக் குழுக்களின் அனைத்துத் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து தங்களுடைய நியாயமான கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து தற்போது டெல்லி சென்றுள்ள அம்மாநில ஆளுநர் தமிழிசை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். பின்னர் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

உள்துறை அமைச்சருடன் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு
உள் துறை அமைச்சருடன் தமிழிசை சந்திப்பு

மரியாதை நிமித்தமான சந்திப்பு என இது கூறப்பட்டாலும், தெலங்கானாவில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பு அமைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்கலமே: 'தொழிற்சங்கம் சாராத புதியவர்களுக்கு வாய்ப்பு' - தெலங்கானா முதலமைச்சர் அதிரடி

Intro:Body:

ஊடக நண்பர்களுக்கு வணக்கம் இன்று மாலை 6 மணி அளவில் தெலங்கானா மாநில கவர்னர் திருமதி தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் சந்திக்கிறார்.



இரவு ஏழு முப்பது மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களையும் சந்திக்கிறார்.

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து தனக்கான அரசால் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர் .

போக்குவரத்து ஊழியின் போராட்டத்தில் ஊழியர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள  மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போக்குவரத்து சங்கங்களின் போராட்டக் குழுக்களின் அனைத்து தலைவர்களும்  கவர்னரை சந்தித்து தங்களுடைய நியாயமான கோரிக்கை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அனைத்து பிரதிநிதிகளும் இந்த தருணத்தில் தெலுங்கானா கவர்னர் மத்தியஉள்துறை அமைச்சர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது


Conclusion:
Last Updated : Oct 16, 2019, 1:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.