ETV Bharat / bharat

இந்தியாவுக்கு 78 டன் உதவி பொருள்களை வழங்கிய சிங்கப்பூர்

author img

By

Published : Apr 26, 2020, 11:38 PM IST

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிவாரண பணிகளுக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் 78 டன் உதவிப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Air India
Air India

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக, அனைத்து நாடுகளும் நோய் தடுப்பு நடவடிக்கையில் களமிறங்கினாலும், உலக நாடுகள் தங்களால் இயன்ற உதவிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கிவருகின்றன.

இந்தியா சார்பில் உலக நாடுகளுக்கு மருந்துகள் வர்த்தக ரீதியாகவும், உதவி பொருள்களாகவும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூர் அரசு சார்பில் சுமார் 78 டன் உதவிப்பொருள்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் நிறுவனத்திடம் 10 லட்சம் பாதுகாப்பு கருவிகள் வாங்கியதற்காக சிங்கப்பூர் அரசு இந்த உதவியை வழங்கியுள்ளது. இந்த உதவிப்பொருள்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் அரசின் இந்த உதவிக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்ஷ்தீப் பூரி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கைத் தளர்த்த பெல்ஜியம் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.