ETV Bharat / bharat

இந்தியா- சீனா எல்லை விவகாரம்: மத்திய அரசை கேள்வி எழுப்பும் சிவசேனா

author img

By

Published : Jun 19, 2020, 4:05 PM IST

மும்பை: சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா இந்திய- சீனா எல்லைப் பதற்றங்கள் குறித்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

shiv-sena-targets-pm-modi-over-killing-of-20-indian-soldiers-in-ladakh-face-off
shiv-sena-targets-pm-modi-over-killing-of-20-indian-soldiers-in-ladakh-face-off

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியான தலையங்கங்கத்தில் மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

சாம்னாவின் தலையங்கத்தில், ”பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் இந்திய வீரர்களின் தலையை துண்டித்துக் கொன்றது. பின்னர், இதுகுறித்து உடனடி நடவடிக்கை இந்திய அரசால் எடுக்கப்படவேண்டும் என அனைவரும் வலியுறுத்தினோம்.

இப்போது சீனக் குரங்குகள் தாக்குதல் நடத்தியதில் எங்கள் 20 வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். பிரதமர் மோடி இப்போது அனைத்து கட்சி கூட்டத்தையும் அவசரமாக அழைத்துள்ளார்.

பிரதமர் மோடி முன்னதாக, 'இந்தியா ஒருபோதும் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாது. யாரேனும் அதனை சீண்ட நினைத்தால், அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கும். இந்தியா தனது சுய மரியாதையையும் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்' என்று கூறியிருந்தார். அந்த பதிலடி கொடுப்பதற்கு தற்போது 20 வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனரே அது போதாதா.

சீனாவின் இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு பேசிய பிரதமர், இந்தியா அமைதியையே விரும்புவதாகவும், தக்க சூழல் ஏற்பட்டால் இந்திா பதிலடி கொடுக்கும். இந்திய வீரர்களின் தியாகங்கள் வீணாகப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால், தற்போது சீன ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல் 1962ஆம் ஆண்டைப் போலவே பயங்கரமானது. மேலும், இது சுயமரியாதை மற்றும் ஒருமைப்பாடு மீதான மிகப்பெரிய தாக்குதல். எங்கள் வீரர்களின் தியாகம் வீணாகப் போவதில்லை என்று இப்போது கூறப்படுகிறது . ஆனால் நாங்கள் பாகிஸ்தானை மட்டுமே அச்சுறுத்த முடியும். சீனாவை எங்களால் சமாளிக்க முடியவில்லை என்ற மாயையிலிருந்து நாட்டை எவ்வாறு விடுவிக்க முடியும்?.

மராத்திய நாளிதழ் ஒன்றின்படி, 1962 போரில்கூட இந்திய வீரர்கள் ஒற்றைப்படை இலக்கத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் தற்போது நாளுக்கு நாள் போர் மூளும் சூழல் அதிகரித்துவருகிறது. ஒரே நாளில் 20 வீரர்களையும் இழந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இன்று வீரர்களுக்குத் தேவையான ஆயுதம் உள்பட அனைத்தும் இருக்கிறது, ஆனால் இன்னும் சீனர்கள் இந்திய வீரர்களை கொடூரமாக கொன்றுவருகின்றனர். பண்டிட் நேருவை குற்றஞ்சாட்டியவர்கள் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், 20 வீரர்களின் தியாகம் அர்த்தமுள்ளதாகிவிடும்.

சீனாவை ஓரளவிற்கு நிதி நெருக்கடியில் ஆழ்த்துவது இன்றைய சூழலில் சாத்தியமே. சீனாவிலிருந்து வரும் பொருள்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள பல சீன நிறுவனங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? மகாராஷ்டிராவிலிருந்து ஒரு சீன நிறுவனத்துடனான தொடர்பு நிறுத்தப்பட்டால், வேறு எந்த மாநிலத்துடனும் அது உறவு கொள்ளும்.

எனவே, சீன நிறுவனங்கள் குறித்து மத்திய அரசு தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் 6 லட்சம் கோடி ரூபாயில் வர்த்தகம் உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயும் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு என இரண்டுமே உள்ளன, இதன் காரணமாக சீனா மேலும் பயனடைகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.