ETV Bharat / bharat

அர்னாப் கோஸ்வாமிக்கு அமித் ஷா ஆதரவு

author img

By

Published : Nov 4, 2020, 7:16 PM IST

டெல்லி: அர்னாப் கோஸ்வாமி கைது அவசர நிலைப் பிரகடனத்தை நினைவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

கட்டட வடிவமைப்பாளர் அன்வே நாயக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல் துறை அதிரடியாக கைது செய்துள்ளது. அவரது வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கிடையே, பல்வேறு மத்திய அமைச்சர்கள் அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், அர்னாப்பின் கைது அவசர நிலை பிரகடனத்தை நினைவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஜனநாயகத்தை மீண்டும் அவமதித்துள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம் தனிமனித சுதந்திரத்திற்கும் நான்காவது தூணான ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இது அவசர நிலை பிரகடனத்தை நினைவுப்படுத்துகிறது. பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலை எதிர்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

  • Congress and its allies have shamed democracy once again.

    Blatant misuse of state power against Republic TV & Arnab Goswami is an attack on individual freedom and the 4th pillar of democracy.

    It reminds us of the Emergency. This attack on free press must be and WILL BE OPPOSED.

    — Amit Shah (@AmitShah) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த 2018ஆம் ஆண்டு, அன்வே நாயக், அவரின் தாயார் குமுத் நாயக் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். ரிபப்ளிக் தொலைக்காட்சி தனக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராத காரணத்தால் தற்கொலை செய்துகொள்வதாக அன்வே நாயக் தற்கொலை செய்யும்போது எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அன்வே நாயக்கின் மகள் அத்நயா நாயக் அளித்தப் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே, டிஆர்பி முறைகேட்டில் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஈடுபட்டதாக மும்பை காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குஜராத் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.