ETV Bharat / bharat

'பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும்' - சுவாதி மாலிவால்

author img

By

Published : Sep 9, 2020, 10:43 PM IST

டெல்லி: 12 வயது சிறுமி மற்றும் 90 வயது மூதாட்டி சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து விரைவாக விசாரிக்க வேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் கோரியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் - சுவாதி மாலிவால்
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் - சுவாதி மாலிவால்

இது தொடர்பாக டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு, டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், அடுத்த மூன்று நாட்களுக்குள் இரு பாலியல் வழக்குகளிலும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், 12 வயது சிறுமி மற்றும் 90 வயது மூதாட்டி சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் விரைவான விசாரணையை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளின் மனதில் சட்டத்தின் பயம் முழுமையாக இல்லாதிருப்பதாகவும், நாட்டின் இருக்கும் சட்டத்திட்டத்தின் தளர்வானது தேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக கொடூரமான குற்றங்களைச் செய்ய அவர்களைத் தூண்டுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார். நாட்டில் நீதி வழங்கல் சிக்கலானது, இது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் மனநிலையை உடைக்கிறது" என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.

முன்னதாக, ஆகஸ்ட் 4ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் பலத்த காயங்களுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். செப்டம்பர் 7ஆம் தேதி டெல்லியில் 90 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.