ETV Bharat / bharat

ரிலையன்ஸ் நிறுவன செல்போன் டவர்கள் சேதம் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

author img

By

Published : Jan 5, 2021, 12:32 PM IST

ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு
ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு

சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் டவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சேதப்படுத்தியதாக அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது அரசு அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் இனி ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கும், பஞ்சாப் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே, புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் பரவியதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாது இந்த தவறான தகவல் காரணமாக தங்களது டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியது.

இதனையடுத்து, தாங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தில் ஈடுபட்டதுமில்லை, இனி ஈடுபடும் திட்டமும் இல்லை என ரிலையன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.