ETV Bharat / bharat

தேசத்தின் துயர சூழலை பிரதிபலிக்கிறது ரிசர்வ் வங்கி - ராகுல் காந்தி

author img

By

Published : Aug 7, 2020, 9:51 PM IST

டெல்லி: நாட்டில் மக்களின் நம்பிக்கை குறைந்து அச்ச உணர்வு மேலோங்கியுள்ளதை ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Rahul
Rahul

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்று (ஆகஸ்ட் 7) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டு, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாட்டின் கோவிட் - 19 பெருந்தொற்று தாக்கத்தால் பொருளாதாரம் வலுவிழந்த சூழலில் உள்ளது எனவும் நாட்டின் பண வீக்கம் ஆறு விழுக்காட்டைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, இம்முறை ரேப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை எனவும் கூறினார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ரிசர்வ் வங்கி நாட்டின் தற்போதைய உண்மையான மனநிலையை பிரதிபலிக்கிறது. மக்களின் தன்னம்பிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்து, பயமும், பாதுகாப்பின்மையும் நிலவுகிறது. இனிவரும் காலத்தில், வேலையின்மை, பொருளாதாரம் குறித்து மேலும் மோசமான செய்திகள் வெளியாகலாம்' என எச்சரித்துள்ளார்.

கரோனா காலம் என்பதால் 75 விழுக்காடு இருந்த தங்க நகைக்கடன் வரம்பு 90 விழுக்காடாக உயர்த்தி ரிசர்வ் வங்கி இன்றைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடந்த 68 ஆண்டுகளில் முதன்முறையாக ரத்தான கேரளாவின் நேரு டிராபி படகுப் பந்தயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.