ETV Bharat / bharat

ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கை பலனளிக்குமா? - நிபுணர்கள் கருத்து

author img

By

Published : Oct 5, 2019, 7:50 AM IST

Updated : Oct 7, 2019, 7:17 AM IST

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5. 40 சதவிகிதத்திலிருந்து 5.15 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது குறித்து தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

RBI

ஐந்தாவது முறையாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருந்தாலும், இது எந்த அளவுக்கு மக்களுக்குப் பலனளிக்கும் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பொருளாதார நிபுணர்களின் கருத்து...

வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி!

எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படும் வங்கிகளுக்கான குறைந்தகால வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்துள்ளது. 5.40 சதவிகிதத்திலிருந்து 5.15 சதவிகிதமாக தற்போது குறைத்துள்ளது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவில் (Monetary Policy) அனைவருமே வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்ததால், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து முறைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வட்டி விகிதம் 1.35 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், "நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், உலகப் பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை, மூன்றாவது காலாண்டிலும் தொடர்கிறது. நாட்டின் ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சிக் குறைந்துள்ளது. நாட்டின் உற்பத்தித் துறை சரிவை சந்தித்ததையடுத்து, ஜூலை மாதத்தில் தொழில் துறையும் சரிவை சந்தித்துள்ளது.

நாட்டின் எட்டு முக்கியத் துறைகள் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சரிவைச் சந்தித்துள்ளன. ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் மக்களின் தேவை குறைந்துள்ளது. அதேநேரத்தில், பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. எதிர்பார்த்ததைவிட பருவமழை அதிக அளவு பெய்துள்ளதால், பயிர்செய்தல் நல்ல முறையில் உள்ளது. இதனால் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து, நாட்டில் தேவையை அதிகரிக்கும். இவைத் தவிர்த்து, நாட்டில் ஏற்றுமதியைவிட இறக்குமதி குறைந்துள்ளது. அந்நியக் கையிருப்பு அதிக அளவில் உள்ளது" என்று ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்தார்.

வட்டி குறையும்!

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிய, இனி வாங்கப்போகும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை, ரெப்போ விகிதம் அல்லது அரசின் குறுகிய காலக்கடன் பத்திரத்துடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகிதக் குறைப்பு இன்னும் முழுமையாக மக்களுக்கு சென்று சேரவில்லை என்றும், இது மந்தகதியிலே நடைபெறுவதாகவும் சக்தி காந்ததாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதக் குறைப்பு தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன், "எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதனால் கடன் வாங்குவோர் ஆர்வத்துடன் கடன் வாங்கத் தொடங்கி, வியாபார நடவடிக்கைகள் துரிதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அப்படி நடக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. கடனை வைத்து மட்டுமே வியாபாரம் நடப்பதில்லை. தொழில் துறைக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. ரெப்போ ரேட் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதால் வங்கிகளில் வட்டி குறைந்து, ஃபிக்செட் டெபாசிட்டை மட்டுமே நம்பியிருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்னை சுழற்சி முறையிலானதே! வேகமான நடவடிக்கையால் இது மாறிவிடாது. தற்போதைய சூழலில் அதை அனுமதிக்கத்தான் வேண்டும். அரசு அவசர கதியில் செயல்படுகிறது" என்று கூறினார்.

தொழில்துறை வரவேற்பு!

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதாரச் சூழலில், கால் சதவிகித வட்டிக்குறைப்பு நடவடிக்கை போதுமானதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்கி காந்ததாஸ், ”அண்மையில் அரசு அறிவித்தத் திட்டங்களால் நுகர்வு அதிகரித்து, தனியார் முதலீடுகள் கூடுவதற்கான வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு தொழில் துறையும் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய இந்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் சி.ஏ. சத்குரு, "தொழில் துறையை ஊக்குவிக்க அரசு, பொது மானியம், வட்டியில் மானியம் (interest subvention) உள்ளிட்டவைகளைச் செய்ய வேண்டும்" என்றார். நுகர்வு அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பங்குச் சந்தைகளில் இறக்கம்...

பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டால், பங்குச் சந்தைகள் ஏற்றம் பெறும். ஆனால் நேற்றைய வர்த்தக நேர முடிவில், மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது. அதேபோல் நிஃப்டி, 130 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டது. நடப்பு நிதியாண்டிற்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சிக் கணிப்பை 6.9 சதவிகிதத்திலிருந்து 6.1 சதவிகிதமாக ஆக ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்ததே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய பங்குச்சந்தை நிபுணரான அருள் ராஜன், "வளர்ச்சிக் குறையும் என்ற செய்தி பங்குச்சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளின் நிலை குறித்து முதலீட்டாளர்களுக்கு எழுந்த சந்தேகமே இதற்கு முக்கியக் காரணம். கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வங்கிகள் மோசமான நிலையில் இருப்பதாகப் பன்னாட்டு நிதி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறியிருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் வங்கித் துறை பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. நிதித் துறையின் ஸ்திரத்தன்மை, தற்போது கூட்டுறவு வங்கிகளில் நிலவும் பிரச்னை, பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக்கடன் ஆகியவற்றால், வங்கித் துறைப் பங்குகளின் விலை குறைந்தன. தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுத் துறை நிறுவனங்களின் (சி.பி.எஸ்.இ.) குறியீடுகள் தவிர்த்து, மற்ற எல்லாக் குறியீடுகளும் சரிவு கண்டன. பொருளாதார நிலையை படம்பிடித்துக்காட்டும் உலோகப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கை மக்களை சென்றடைய சில நாட்களாகும். தற்போதைய சூழலில் பங்குச் சந்தைகள் பலவீனமாகவே உள்ளன" என்று தெரிவித்தார்.

வருகிற டிசம்பர் மாதத்தில் மறுபடியும் வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் சூசகமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

வதந்திகளால் வாடிக்கையாளர்கள் கலக்கமடையத் தேவையில்லை - ரிசர்வ் வங்கி உறுதி

Intro:ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை பலனளிக்குமா?....நிபுணர்கள் கருத்து

சென்னை: ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தாலும் இது எந்த அளவுக்கு மக்களுக்கு பலனளிக்கும் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும் கருத்துக்களை விரிவாகப் பார்க்கலாம்......
Body:5-ஆவது முறையாக வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி

எதிர்பார்த்தைப் போலவே ரிசர்வ் வங்கி இன்று ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படும் வங்கிகளுக்கான குறைந்த கால வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்துள்ளது. ரெப்போ விகிதம் 5.40 சதவிகிதத்தில் இருந்து 5.15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழுவில் அனைவருமே வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இதன்மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1.35% வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுக் கூட்டத்திற்குப் பிறகு மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் உலகப் பொருளாதாரத்தில் நிலவிய மந்த நிலை மூன்றாவது காலாண்டிலும் தொடர்கிறது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ளது, உற்பத்தி துறை சரிவை சந்தித்ததையடுத்து, ஜூலை மாத்தத்தில் தொழில்துறையும் சரிவை சந்தித்துள்ளது, எட்டு முக்கியத்துறைகள் ஆகஸ்ட் மாதத்தில் சரிவு கண்டுள்ளன, ஊரக மற்றும் நகர பகுதிகளில் தேவை குறைந்துள்ளது. அதேநேரத்தில், பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது, எதிர்பார்த்ததைவிட பருவ மழை அதிக அளவு பெய்துள்ளது. பயிருடுவது நல்ல நிலையில் உள்ளது. இதனால் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து நாட்டில் தேவையை அதிகரிக்கும், ஏற்றுமதியைவிட இறக்குமதி செய்யப்படுவது குறைந்துள்ளது, அந்நிய கையிருப்பு அதிக அளவில் உள்ளது" என்று வட்டி விகிதம் குறைக்கப்பட்டதற்கான காரணங்களை விவரித்தார்.

வட்டி குறையும்!

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும், வாங்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை ரெப்போ விகிதம் அல்லது அரசின் குறுகிய கால கடன் பத்திரத்துடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு இன்னும் முழுமையாக மக்களுக்கு சென்று சேரவில்லை என்றும் இது மந்த கதியிலே நடைபெறுவதாகவும் சக்திகாந்ததாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கடன்களுக்கான வட்டி குறையும் அதேநேரத்தில் வங்கி சேமிப்புகளின் வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிக்செட் டிபாசிட்டை மட்டுமே நம்பியிருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் ஏற்படும் என்கிறார் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன். இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய அவர், "எதிர்பார்த்தைத் போலவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. இதனால் கடன் வாங்குவோர் ஆர்வத்துடன் கடன் வாங்கி வியாபார நடவடிக்கைகள் துரிதமாகும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி நடக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. கடனை வைத்து மட்டும் வியாபாரம் நடப்பதில்லை. தொழில்துறைக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. ரெப்போ ரேட் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதால் வங்கிகளில் வட்டி குறைந்து பிக்செட் டிபாசிட்டை மட்டுமே நம்பியிருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. தற்போது நிலவும் பொருளாதார பிரச்னை சுழற்ச்சி முறையிலானதே. வேகமான நடவடிக்கையால் இது மாறிவிடாது. தற்போதைய சூழலில் அதை அனுமதிக்கதான் வேண்டும். அரசு அவசர கதியில் செய்படுகிறது" என்றார்.

தொழில்துறை வரவேற்பு

நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார சூழலில் கால் சதவிகித வட்டி குறைப்பு நடவடிக்கை போதுமானதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்கிகாந்ததாஸ், அண்மையில் அரசு அறிவித்த திட்டங்கள் நுகர்வை அதிகரித்து தனியார் முதலீடுகள் கூடுவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு தொழில்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது பற்றி நம்மிடம் பேசிய ஹிஸ்துஸ்தான் வர்த்தக சபையின் தலைவர் சி.ஏ.சத்குரு, "தொழில்துறையை ஊக்குவிக்க அரசு, பொது மானியம், வட்டியில் மானியம் (interest subvention) உள்ளிட்டவை செய்ய வேண்டும்" என்றார். நுகர்வு அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெவும் அவர் வலியுறுத்தினார்.

பங்குச் சந்தைகளில் இறக்கம்...

பொதுவாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டால் பங்குச் சந்தைகள் ஏற்றம் பெறும் ஆனால் இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது. அதேபோல் நிஃப்டி, 130 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டது. நடப்பு 2019- 2020 நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 6.9% இருந்து 6.1 % ரிசர்வ் வங்கி குறைத்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய பங்குச் சந்தை நிபுணரான அருண் ராஜன், "வளர்ச்சி குறையும் என்ற செய்தி பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கிகளின் நிலை குறித்து முதலீட்டாளர்களுக்கு எழுந்த சந்தேகமே இதற்கு முக்கிய காரணம். கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய வங்கிகள் மேசமான நிலையில் இருப்பதாக பன்னாட்டு நிதி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறியிருந்தது. இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. நிதித்துறை ஸ்திரத்தன்மை, தற்போது கூட்டுறவு வங்கிகளில் நிலவும் பிரச்னை, பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக்கடன் ஆகியவற்றால் வங்கித்துறை பங்குகளின் விலை குறைந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் (சிபிஎஸ்இ) குறியீடுகள் தவிர மற்ற எல்லா குறியீடுகளும் சரிவு கண்டன. பொருளாதார நிலையை படம்பிடித்துக்காட்டும் உலோகப் பங்குகள் சரிவை சந்தித்தன. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை மக்களை சென்றடைய சில நாட்களாகும். தற்போதைய சூழலில் பங்குச் சந்தைகள் பலவீனமாகவே உள்ளது" என்றார். அடுத்தாக டிசம்பர் மாதம் மேலும் வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ஆளுநர் சக்திகாந்த தாஸ் சூசகமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:Use file photos
Last Updated : Oct 7, 2019, 7:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.