ETV Bharat / bharat

நீயா, நானா? காங்கிரஸில் தொடரும் சீனியர்ஸ் vs ஜூனியர்ஸ்

author img

By

Published : Jul 16, 2020, 4:31 PM IST

Updated : Jul 16, 2020, 4:37 PM IST

இளம் தலைவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக் விஜய சிங் குற்றம்சாட்டியுள்ளார். கட்சியில் ஒரு பிரிவினர், எதிர்காலத்திற்கு இளம் தலைவர்கள் முக்கியம் எனக் கூறி இப்பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகின்றனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு காங்கிரஸ் கட்சியில் அரசியல் தலைமைக்காக போராடும் சீனியர்ஸ் vs ஜூனியர்ஸ் போட்டியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

மாற்றுக் கட்சிகள் ஜூனியர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை செய்துவரும் நிலையில், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய காலத்தில் தாங்கள் மூத்தத் தலைவர்களால் ஒதுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இளம் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

2020ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முகமாக இருந்த சிந்தியா (49) தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அடுத்து, தான் ஓரங்கட்டப்படுவதாக குற்றம்சாட்டிய ராஜஸ்தானின் சச்சின் பைலட், கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

முன்னதாக, மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மிலிந்த் தியோரா (43) விலகினார். கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி சிவ சேனாவில் இணைந்தார். அஸ்ஸாமில், மூத்தத் தலைவர் தருண் கோகாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் தன்னுடையை குறைகளை கேட்க காங்கிரஸ் தலைமை மறுப்பதாகவும் கூறி அக்கட்சியிலிருந்து விலகினார்.

முதலமைச்சராக கெலாட் பொறுப்பேற்றதிலிருந்தே ராஜஸ்தான் காங்கிரஸில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, அரசுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவித்த பைலட், தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவுள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை 15ஆம் தேதி, இவ்விவகாரத்தில் பைலட் மீது நேரடியான விமர்சனங்களை வைத்த கெலாட், இளம் அரசியல் தலைவர்கள் குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாக கூறினார். இம்மாதிரியானவர்கள் தான் நாட்டை அழிக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கெலாட் மேலும் கூறுகையில், "இப்போதுள்ள இளம் தலைவர்கள் கடுமையாக உழைப்பதில்லை. சீக்கிரமாகவே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று மாநில தலைவர்களாகின்றனர்.

எங்கள் காலத்தில், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகிய அமைப்புகளில் கடுமையாக உழைத்தோம். அவர்களும் எங்களை போல் உழைத்திருந்தால், சிறப்பான முடிவுகள் வெளியாகி இருக்கும். அரசை கவிழ்க்கும் முயற்சியில் துணை முதலமைச்சரே ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், ராஜஸ்தான் மாநிலத் தலைவர், துணை முதலமைச்சர் ஆகிய பதவிகள் சச்சின் பைலட்டுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு என்ன வயதாகிறது? இளம் தலைவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் திக் விஜய சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

கட்சியில் ஒரு பிரிவினர், எதிர்காலத்திற்கு இளம் தலைவர்கள் முக்கியம் எனக் கூறி இப்பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகின்றனர்.

1998ஆம் ஆண்டு, மூத்தத் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து விலகிய மம்தா பானர்ஜி, பின்னர் மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார். இதே போன்ற பிரச்னையில், தனது தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு ஜெகன் மோகன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

பின்னர், தனிக்கட்சி தொடங்கி அவர் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதையும் படிங்க: 'சுஷாந்த் மரணம்; துபாய் டான் தொடர்பில் பாலிவுட்டின் முக்கியப் புள்ளிகள்' - சிபிஐ விசாரணை கோரும் சு. சுவாமி

Last Updated : Jul 16, 2020, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.