ETV Bharat / bharat

பிரியங்கா காந்தியின் உதவியாளர் முன்பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு!

author img

By

Published : Jun 13, 2020, 4:45 AM IST

லக்னோ: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளார் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் முன் பிணை கேட்டு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

Priyanka Gandhi Secretary Sandeep Singh congress Congress bus forgery case Migrant bus Allahabad High Court UP Government Ajay Kumar Lallu பிரியங்கா காந்தி பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் up bus poitics அஜய் குமார் லாலு
priyanga gandhi

உத்தரப்பிரதேச அரசு சந்தீப் சிங் மீது பதிந்துள்ள வழக்கிலிருந்து அவர் முன்பிணை வேண்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக பிரியங்கா காந்தி சார்பாக 1000 பேருந்துகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதற்காக பிரியங்கா காந்தி சார்பில், உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

அப்போது, ஆயிரம் பேருந்துகளின் பதிவு எண்ணை வழங்குமாறு உத்தரப்பிரதேச அரசு கேட்டது. அதன்படி, அனுப்பப்பட்ட ஆயிரம் பேருந்துகளின் பதிவு எண்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனங்களின் பதிவு எண்கள் எனக்கூறி பேருந்துகளை உத்தரப்பிரதேசத்துக்குள் அனுமதிக்க அம்மாநில அரசு மறுத்தது.

இதைத்தொடர்ந்து, பிரியங்கா காந்தி, அவரது உதவியாளர் சந்தீப் சிங், உத்தரப்பிரதேச காங்கிரஸின் பொதுச்செயலாளர் அஜய் குமார் லாலு உள்ளிட்டோர் உ.பி., எல்லையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் ஈடுபட்ட அஜய்குமார் லாலு கைது செய்யப்பட்டார். இதன்பின்பு அவருக்கு பிணை வழங்கப்பட்டாலும், ஆவணங்களில் மோசடி செய்ததாகக் கூறி, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆவணங்களில் மோசடி செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் சந்தீப் சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் கீழ், தன்னை கைது செய்வதிலிருந்து முன்பிணை வழங்கவேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தை சந்தீப் சிங் நாடியுள்ளார்.

இவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு குறிப்புகளை சமர்ப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஜூன்17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அமைச்சருக்கு கரோனா; பீதியில் அரசியல் பிரமுகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.