ETV Bharat / bharat

கேரள தங்கம் கடத்தல் வழக்கு : தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்

author img

By

Published : Jul 10, 2020, 3:52 AM IST

டெல்லி: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க கடத்தல் வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரள தங்கம் கடத்தல் வழக்கு : தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு : தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக "பயனுள்ள விசாரணைக்கு தலையீடு" கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

30 கிலோ எடையுள்ள தங்கம், வளைகுடாவில் இருந்து சமீபத்தில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

பரபரப்பான இந்த வழக்கு தொடர்பாக ஒரு பெண் உள்பட இரண்டு நபர்கள் தேடப்பட்டு வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நேபாளத்தில் இந்திய செய்தி சேனல்களுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.