ETV Bharat / bharat

ஆட்டோ ஓட்டுநர் மரணம்; டெல்லி காவல்துறைத் தலைவர் ஆஜராக உத்தரவு!

author img

By

Published : Oct 21, 2020, 2:06 AM IST

உச்சநீதிமன்ற வழக்குரைரும் மனித உரிமை ஆர்வலருமான ராதகாந்த திரிபாதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலுத்தியதற்கான ஆவணத்தை இணைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

National Human rights Commission Delhi Police Commissioner Supreme Court lawyer NHRC issues summons to Delhi Police Chief ஆட்டோ ஓட்டுநர் மரணம்; டெல்லி காவல்தலைவர் ஆஜராக உத்தரவு டெல்லி ஆட்டோ ஓட்டுநர் மரணம் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
National Human rights Commission Delhi Police Commissioner Supreme Court lawyer NHRC issues summons to Delhi Police Chief ஆட்டோ ஓட்டுநர் மரணம்; டெல்லி காவல்தலைவர் ஆஜராக உத்தரவு டெல்லி ஆட்டோ ஓட்டுநர் மரணம் தேசிய மனித உரிமைகள் ஆணையம்

டெல்லி: வாகன ஓட்டுநரின் மரணத்திற்கு காரணமான காவல் அலுவலர்களுக்கு எதிராக இழப்பீடு மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை வழங்குவதில் டெல்லி காவல்துறை தலைவரின் "குறைபாடுள்ள அணுகுமுறை" குறித்து அதிருப்தி தெரிவித்த தேசிய மனித உரிமை ஆணையம் டிசம்பர் 29ஆம் தேதிக்கு முன்னர் ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் மனித உரிமை ஆர்வலருமான ராதகாந்த திரிபாதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யும் போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் கூடிய ஆவணத்தையும் அறிக்கையையுடன் இணைக்க வேண்டும் என என்.ஹெச்.ஆர்.சி கோரியுள்ளது.

முன்னதாக தேசிய மனித உரிமை ஆணையம், “பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றக்கூடிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு ஜனவரியில் தர்மேந்திர ராஜ்புத் என்ற ஆட்டோ டிரைவர் காயமடைந்து சில காவலர்களால் துரத்தப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக திரிபாதி குற்றம் சாட்டியிருந்தார்.

அவரது உயிரைக் காப்பாற்ற சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் காவலர்கள் தவறிவிட்டனர். இதனால், ஜனவரி 19-20 இடைப்பட்ட இரவில் இறந்துவிட்டார். அப்போது அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக காவலர்கள் கூறுகின்றனர். அவரை காவலர்கள் துரத்தும்போது அவர் சுவரில் மோதி பலத்த காயமடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: அம்பலமான போலி என்கவுண்டர் : கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.