ETV Bharat / bharat

'சந்திராயன்-2 திட்டத்தின் பின்னடைவுக்கு மோடிதான் காரணம்' - காங்கிரஸ் சுசீல் ஷர்மா

author img

By

Published : Sep 11, 2019, 11:28 AM IST

ஜெய்ப்பூர்: சந்திராயன்-2 திட்டத்தின் பின்னடைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழுக்காரணம் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சுசீல் ஷர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுசீல் ஷர்மா

இது குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சுசீல் ஷர்மா செய்தியாளார்கள் சந்திப்பில் பேசியதாவது,

சந்திராயன்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் இருந்ததுதான் அத்திட்டதின் பின்னடைவுக்கு முழுமுதற் காரணம் என்றார்.

நாட்டில் நடைபெறக்கூடிய வெற்றி செயல்கள் அனைத்திற்கும் பாஜக தலைவர்கள் தங்களால்தான் நடைபெற்றது என்று கூறி தற்பெருமை அடைந்து கொள்ளும் பழக்கம் உள்ளது, அதனால்தான் பிரதமர் மோடி, விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நாளன்று அங்கு சென்றிருந்தார். அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் சந்திராயன்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறக்கப்பட்டிருக்கும். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அடைந்திருக்கும் இந்த 95 சதவீதம் வெற்றி நூறு சதவீதம் எட்டாமல் போனதிற்கு மோடிதான் காரணம் என்று சுசீல் ஷர்மா திட்டவட்டமாக குற்றஞ்சாட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்த கருத்திற்கு மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.