ETV Bharat / bharat

இலவச அரிசி வழங்க ஆளுநர் தடங்கல் - போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்

author img

By

Published : Apr 16, 2020, 6:40 PM IST

புதுச்சேரி: அனைவருக்கும் இலவச அரிசி வழங்க ஆளுநர் தடையாக உள்ளதாக குற்றம்சாட்டி அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

governor
governor

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகை உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அவர்களைக் காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கே போடப்பட்டிருந்த தடுப்பு அருகே அவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கியது போல், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டுமெனவும், அதற்கான கோப்பினை ஆளுநருக்கு அனுப்பியும் இதுவரை ஆளுநர் கையொப்பம் இடாமல் காலம் தாழ்த்தி தடையாக இருந்து வருகிறார் எனவும் கூறினர். மேலும் ஆளூநர் அனுமதி அளிக்கும் வரை இந்த தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையறிந்து சட்டப்பேரவையில் இருந்து நிகழ்விடத்திற்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இலவச அரிசி வழங்க ஆளுநர் தடங்கல் - போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ”கடந்த வாரம் பிரதமர் மோடியுடன் தொடர்பு கொண்டு பேசிய போது புதுச்சேரியில் அனைவருக்கும் இலவச அரிசி வழங்க கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், துணைநிலை ஆளுநர் மக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு சம்பந்தப்பட்ட கோப்பில் கையொப்பமிடாமல் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் மக்களிடம் என்னைப் பற்றி பொய்யான வதந்திகளை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து வருகிறார்“ எனக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: 3 ஆயிரம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.