ETV Bharat / bharat

எதிர்க்கட்சிகளுக்கு செக் வைத்த மாயாவதி; மாநிலங்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு?

author img

By

Published : Oct 23, 2020, 3:33 PM IST

டெல்லி: குறைந்த எண்ணிக்கையிலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுள்ளபோதிலும், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளரை அறிவித்துள்ளது.

மாயாவதி
மாயாவதி

உத்தரப் பிரதேசம், உத்தரக்காண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்விரு மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளிலும் பாஜக பலமாக உள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, சமாஜ்வாதி கட்சி மட்டும் ஒரு இடத்தில் வெற்றபெற வாய்ப்புள்ளது. அந்த இடத்திற்கு, ராம் கோபால் யாதவ்வையே அக்கட்சி நிறுத்தியுள்ளது.

பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பட்சத்தில், மற்றொரு இடத்தில் எதிர்க்கட்சி வெற்றிப் பெறவாய்ப்புள்ளது. இதற்கிடையே, அந்த இடத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதமை வேட்பாளராக அறிவித்துள்ளது.

அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது வேட்புமனுவை அக்டோபர் 26ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தலித்களின் வாக்குகளை கவரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த தேர்தலில், 19 தொகுதிகளில் மட்டுமே மாயாவதியின் கட்சி வெற்றபெற்றது. ஆனால், வெற்றிபெற்றவர்களில் மூவர் கட்சிக்கு எதிராகவே போர்கொடி தூக்கி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் வெற்றிபெறுவதற்கு மேலும் 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எதிர்க்கட்சிகளுக்கு செக் வைக்கும் விதமாக தலித் வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் வெற்றிபெரும் பட்சத்தில், மேலும் அவர்களுக்கு உபரியாக 10 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதில், இருவர் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆவர்.

எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாயாவதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும், போட்டி சவாலாகவே இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ட்ரம்பின் இந்திய விமர்சனம், காங்கிரஸ் சாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.