ETV Bharat / bharat

துர்கா பூஜை தீம் பாடலில் இணைந்து நடனம் ஆடிய இரு பெண் எம்.பி.க்கள்!

author img

By

Published : Sep 20, 2019, 9:48 AM IST

துர்கா பூஜையை கொண்டாடும் தீம் பாடலுக்கு மேற்குவங்க மக்களவை உறுப்பினர்களாக உள்ள இரு பெங்காலி சினிமா நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

Durga Puja theme song

துர்கா பூஜை மேற்குவங்க மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்தத் திருவிழா அக்டோபர் மாதம் ஆறாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விழாவுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யும் பொருட்டு மேற்குவங்கத்தில் இரு பெண் மக்களவை உறுப்பினர்கள் துர்கா பூஜை பாடலில் நடித்துள்ளனர்.

பெங்காலி நடிகைகளான நுஸ்ரத் ஜஹான் ருகி, மிமி சக்ராபோர்டி ஆகிய இருவரும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மேற்குவங்க எம்.பி.க்களாகினர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இவர்கள் இருவரையும் வேட்பாளராக அறிவிக்கும்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குதூகலமடைந்தனர். இந்நிலையில் துர்கா பாடலில் இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடி நடித்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தீம் (theme) பாடலை ஃபேஸ்புக்கில் 15 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ’ஆஷே மா துர்கா’ என்று தொடங்கும் இப்பாடலை இந்திரதீப் தாஸ் குப்தா என்பவர் இசையமைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.