ETV Bharat / bharat

புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க கிரண்பேடி உத்தரவு

author img

By

Published : Jan 8, 2020, 12:24 PM IST

புதுச்சேரி: புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டதை அடுத்து இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

lieutenant-governor-kiran-bedi-orders-for-new-appointment-of-puducherry-election-commissioner
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் அதற்கேற்ப மாநில தேர்தல் ஆணையரை உடனடியாக நியமனம் செய்வதற்கான பணிகளை தொடங்க வேண்டும் இதற்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது என நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து 2019 ஜுலை மாதம் மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது தொடர்பான அறிக்கையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி கிரண்பேடி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ததோடு புதிதாக பாலகிருஷ்ணன் என்பவரை தேர்தல் ஆணையராக நியமனம் செய்தார்.

இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 18ஆம் தேதி உத்தரவு ஒன்றை அனுப்பியது. அதில் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. கிரண்பேடி அதன்படி கடந்த மாதம் 20ஆம் தேதி மத்திய அரசின் கடிதத்தை மேற்கோள்காட்டி ஏற்கனவே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணனின் நியமனம் செல்லாது எனவும் உரிய விதிகளைப் பின்பற்றி புதிதாக தேர்வு செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, இந்த உத்தரவை பின்பற்றத் தேவையில்லை, இந்த அரசியலமைப்பு சட்டம், புதுச்சேரி நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி துணை நிலை ஆளுநரின் இந்த உத்தரவு சட்ட விரோதமானது என தெரிவித்தார். இதனால் யாருடைய உத்தரவை ஏற்று செயல்படுவது என்பதில் தலைமைச் செயலாளருக்கு குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையே கிரண்பேடி மீண்டும் மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது தொடர்பாக புதிய அறிக்கையை செவ்வாய்கிழமை வெளியிட்டார். அதில், மத்திய, மாநில யூனியன் பிரதேசங்களில் 25 ஆண்டுகளாக அலுவலராக பணியாற்றி அனுபவம் பெற்றவர் 65 வயது முதல் 68 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம், ரூ.78 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை ஊதிய விகிதம் இருக்கும் இப்பதவிக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவின்பேரில் உள்ளாட்சித்துறை அறிக்கை வெளியிட்டது.

மாநில தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தில் முதலமைச்சருக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றியுள்ளது.

இதையும் படியுங்க: பேருந்தில் பயணம்செய்த அமைச்சர்: விமர்சித்த கிரண்பேடி!

Intro:புதுச்சேரியில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி புதிய ஆணையரை நியமிக்க உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Body:புதுச்சேரியில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி புதிய ஆணையரை நியமிக்க உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது



புதுச்சேரியில் கடந்த 2011 பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் அதற்கேற்ப மாநில தேர்தல் ஆணையரை உடனடியாக நியமனம் செய்வதற்கான பணிகளை துவங்க வேண்டும் இதற்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது என நீதிமன்றம் புதுவை அரசுக்கு உத்தரவிட்டது இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 2019 வருடத்தில் மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பாக அறிவிக்கையை கிரண்பேடி தன்னிச்சையாக வெளியிட்டார் இதனால்அதிர்ச்சி அடைந்த முதல் நாராயணசாமி சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி கவர்னர் வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ததோடு புதிதாக பால கிருஷ்ணன் என்பவரை தேர்தல் ஆணையராக நியமனம் செய்தார்.


இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செய்தது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 18ம் தேதி உத்தரவு ஒன்றை அனுப்பியது அதில் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தது கவர்னர் அதன்படி கடந்த மாதம் 20ம் தேதி மத்திய அரசின் கடிதத்தை மேற்கோள்காட்டி ஏற்கனவே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாலகிருஷ்ணன் நியமனம் செல்லாது எனவும் உரிய விதிகளை பின்பற்றி புதிதாக தேர்வு செய்யுமாறு தலைமை செயலருக்கு உத்தரவு போட்டார்

இதற்கு முதல்வர் நாராயணசாமி இந்த உத்தரவை பின்பற்ற தேவையில்லை இந்த அரசியலமைப்பு சட்டம் மற்றும் புதுச்சேரி நகராட்சி. கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின்படி கவர்னரின் இந்தஉத்தரவு சட்ட விரோதமானது என தெரிவித்தார் இதனால் யாருடைய உத்தரவை ஏற்று செயல்படுவது என்பதில் தலைமை செயலருக்கு குழப்பம் ஏற்பட்டது

இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி மீண்டும் மீண்டும் மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பாக புதிய அறிக்கை இன்று வெளியிட்டுள்ளார் அதில் மத்திய மாநில யூனியன் பிரதேசங்களில் 25 ஆண்டுகளாக அதிகாரியாக பணியாற்றி அனுபவம் பெற்றவர் 65 வயது முதல் 68 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் ரூபாய் 78 ஆயிரம் முதல் ரெண்டு லட்சம் வரை ஊதிய விகிதம் இருக்கும் இப்பதவிக்கு அடுத்த மாதம் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவின்பேரில் உள்ளாட்சித்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது

மாநில தேர்தல் ஆணையர் நியமனம் விவகாரத்தில் முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதுConclusion:புதுச்சேரியில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி புதிய ஆணையரை நியமிக்க உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.