ETV Bharat / bharat

இரவுப்பணியில் பெண்கள் வேலை பார்க்க கேரள அரசு அனுமதி!

author img

By

Published : Jan 9, 2020, 7:53 PM IST

திருவனந்தபுரம்: தொழிற் சாலைகளில் இரவுப் பணியில் பெண்கள் வேலை பார்க்க இருந்த தடையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மாநிலம், கொச்சினில் தொடங்கிய இரண்டு நாள்கள் வணிக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

'நாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகளை கலைந்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று பேசி வருகிறோம். அப்படியிருக்க தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் பெண்கள் வேலை செய்ய தடையிருப்பது எப்படி ஏற்புடையதாகும்?' என்று கேள்வியெழுப்பியவர், ' ஆண்கள் இரவுப் பணியில் வேலை பார்க்க முடியும் என்றால், ஏன் பெண்களால் பார்க்க முடியாது? ' எனவும் வினவினார்.

'ஆகையால் பெண்களுக்கும் இனிமேல் இருந்து தொழிற்சாலைகளில், இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணிவரை வேலை பார்க்கலாம். இது பெண்கள் முன்னேற்றத்திற்கு மேலும் வழிவகுக்கும்' என்றார்.

தொடர்ந்து பேசியவர், 'பெண்கள் இரவுப் பணிகளில் வேலை செய்ய ஏதுவாக தொழிற்சாலைகளில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்து தர அந்நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' எனக் கூறினார்.

இதனிடையே கர்நாடகா மாநிலத்தில் 2019ஆம் ஆண்டில் இதேபோன்று தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடுலாம் என உத்தரவிட்டது.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் இரவு 10 மணிக்கு மேல் வேலை பார்க்கக்கூடாது என்று கேரளா உயர் நீதிமன்றம் 2015ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: சர்வாதிகாரத்தை அகிம்சை மூலம் எதிர்கொள்ள வேண்டும் - சரத் பவார்

ZCZC
PRI GEN NAT
.KOCHI MDS3
KL-GIM-WOMEN
Ker CM wants ban on women doing night shifts in factories to
go
         Kochi, Jan 8 (PTI) Kerala Chief Minister Pinarayi
Vijayan on Thursday made a strong pitch for ending a legal ban
which prevents women workers from doing night shifts in
factories.
         Vijayan said the CPI(M)-led LDF government headed by
him is planning to grant permission to women workers to do
night shifts beyond 7 p.m as it would help empower women.
         "We talk about equality but a ban is in place
preventing women workers to do work between 7 p.m and 6 a.m.
This is not good for a society like ours. If men can work
between 7 p.m and 7 a.m, women can also work in these hours,"
he said inaugurating the two-day Global Investors Meet here.
         Vijayan, who is also a senior leader of the CPI(M),
said his government is planning to permit women factory
workers to do night duty.
         "I think such a step is necessary as part of
empowering women," he said.
         The Chief Minister said the employers should bring
women-friendly facilities in the factories for women working
in the night shifts.
         They should ensure safe stay and travel of women
working in night shifts, he added.
         Last year, the Karnataka government had issued a
notification allowing women to work in night shifts (7 p.m to
6 a.m) in all factories registered under the factories act.
         The Karnataka government, in the notification, had
cited Madras High Court judgement striking down Section 66(1)
(b) of the Factories Act, 1948, which prohibited employment of
women to work in night shifts.
         Section 66(1)(b) of the Factories Act, 1948 states
that no woman shall be required or allowed to work in any
factory except between 6 a.m and 7 p.m.
         In 2015, Kerala High Court had ordered that women
employees cannot be asked to do nigh shifts extending beyond
10 p.m. PTI TGB
SS
SS
01091337
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.