ETV Bharat / bharat

அக்னி 2 ஏவுகணை இரவு நேரச் சோதனை வெற்றி!

author img

By

Published : Nov 17, 2019, 7:51 AM IST

Updated : Nov 17, 2019, 8:10 AM IST

புபனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற அக்னி 2 ஏவுகணையின் இரவு நேரச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

Agni 2

ஒடிசாவிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில், சனிக்கிழமை இரவு, அக்னி 2 ஏவுகணையில் இரவு நேரத் தாக்குதல் துல்லியத்தைப் பரிசோதிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இரவு நேரத்தில் ஒரு ஏவுகணையைச் சோதிப்பது இதுவே முதல்முறை என்றும் அக்னி-2வின் இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார்.

20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி 2 ஏவுகணை ஆயிரம் கிலோ வெடிபொருள்களைத் தாங்கிச் செல்லும் ஆற்றலுடையது. மேலும், அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் ஆற்றலுடைய இந்த ஏவுகணை சுமார் 200 கிலோ மீட்டர் வரைத் தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது.

ஏற்கெனவே இந்திய ராணுவத்திலுள்ள அக்னி 2 ஏவுகணை, 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி முதன்முதலில் சோதிக்கப்பட்டது. அதேபோல அனுஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டு 2010 மே 17ஆம் தேதி அக்னி 2 வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

அக்னி ஏவுகணைகளில் அக்னி 1 ஏவுகணை 700 கி.மீ தூரத்திலுள்ள இலக்குகளையும்; அக்னி 3 ஏவுகணை 3,000 கி.மீ தூரத்திலுள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.

இதையும் படிங்க: வாழ்வதற்கு கடினமான நாடாக மாறுகிறதா இந்தியா?

Intro:Body:

https://twitter.com/ANI/status/1195712998813290496


Conclusion:
Last Updated : Nov 17, 2019, 8:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.