ETV Bharat / bharat

'இந்துக்கள் இந்தியாவுக்கு வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்?'

author img

By

Published : Jan 2, 2020, 12:30 PM IST

லக்னோ: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தைச் சாடி பேசிய மத்திய உள் துறை இணையமைச்சர் கிஸான் ரெட்டி, இந்துக்கள் இந்தியாவுக்கு வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிஸான் ரெட்டி, kishan reddy
கிஸான் ரெட்டி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மை மதத்தினர் எளிதில் இந்தியக் குடியுரிமைப் பெற வழிவகைசெய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதாவும் அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரானதென்றும் கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தச் சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை சாடி, வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஸான் ரெட்டி, "பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தொடர்ச்சியாக மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு அடைக்கலமும் குடியுரிமையும் கொடுப்பது இந்தியாவின் தார்மீகக் கடமையாகும்.

இவர்கள் இந்தியாவுக்கு வராமல் வேறெங்கு செல்வார்கள்... இத்தாலிக்கா? அப்படியே அவர்கள் அங்கு சென்றாலும் இத்தாலி அவர்களை ஏற்றுக்கொள்ளாது.

ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் குழந்தைத்தனமான அறிக்கையை வைத்தே தெரிகிறது, அவருக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் சரக்கு மற்றும் சேவை வரிக்கும் (ஜிஎஸ்டி) வித்தியாசம் தெரியவில்லை என்று. தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவை குறித்தும் அவருக்குத் தெரியாதுபோல.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுவருகின்றன" என்றார்.

இதையும் படிங்க : இந்தியா முன் நிற்கும் மூன்று சவால்கள்- எதிர்கொள்வது எப்படி ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.