ETV Bharat / bharat

’கோட்சேவின் செயலை இந்து மகாசபா என்றும் ஆதரிக்கும்’

author img

By

Published : Jan 11, 2021, 4:21 PM IST

போபால் : நாட்டின் பிரிவினைக்கு துணை நிற்பவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அதன் விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்பதை உறுதிசெய்த நாதுராம் கோட்சேவின் செயலை இன்றும் ஆதரிக்கிறோம் என அகில பாரதிய இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் டாக்டர் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

Hindu Mahasabha opens Nathuram Godse library in MP's Gwalior
காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் செயலை இந்து மகாசபா என்றும் ஆதரித்தே நிற்கும் !

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரில் கல்வி மையம் ஒன்றை அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பு நேற்று (ஜன.11) தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பின் தேசியத் துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ், “ இன்றைய நமது இளம் தலைமுறையினர் ஓர் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். தேசியவாதம் குறித்த தங்கள் பொறுப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

1947ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இருந்தது என்பதை நாம் மறந்துவிடமுடியாது. எனவே, வரும் தலைமுறையினருக்கு அது குறித்து முழுமையான வரலாறை நாம் அறியும்படி செய்ய வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை நாதுராம் கோட்சே ஏன் எதிர்த்தார். அதனை ஆதரித்தவர்களுக்கு ஏன் எதிராக நின்றார். எதற்கு பதிலடி கொடுத்தார் என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

அவை குறித்து இன்றைய இளையோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாதுராம் கோட்சே கியான்ஷாலா கல்வி மையம் எனும் இந்த நூலகத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த நூலகத்தில், குரு கோபிந்த் சிங், சத்ரபதி சிவாஜி மகாராஜ், மஹாராணா பிரதாப், குருஜி கோல்வாக்கர் போன்ற வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய நூல்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் சுதந்திரத்திற்காக அகில பாரதிய இந்து மகாசபா பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் துணை நின்றது. எண்ணற்ற அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பினர் நாட்டின் சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்தனர். நேரு, முகமது அலி ஜின்னா ஆகிய பிரதமர்களை உருவாக்க காங்கிரஸ் நாட்டை பிரித்தது. அதை இந்து மகாசபா எதிர்த்தது.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் செயலை இந்து மகாசபா என்றும் ஆதரித்தே நிற்கும் !
குவாலியர் நகரில் நாதுராம் கோட்சேவின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள கல்வி மையம்

பிரிவினையை எதிர்த்த தேச பக்தர் நாதுராம் கோட்சே, அதற்கு எதிர்வினையாற்ற திட்டம் தீட்டினார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில்தான் நாதுராம் கோட்சே பயிற்சிப் பெற்றார். அதனை செயல்படுத்த குவாலியரில்தான் கைத்துப்பாக்கியையும் வாங்கினார். அவர் தனது திட்டத்தை செயல்படுத்த எடுத்த முதல் முயற்சி வெற்றிபெறவில்லை. அடுத்ததாக அவர் காந்தியை சந்தித்தபோது, அவரை சுட்டு நாதுராம் கோட்சே அதனை நிறைவேற்றினார்.

நாட்டின் பிரிவினைக்கு துணை நிற்பவர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அதன் விளைவுகளை அவர் சந்தித்தேயாக வேண்டும் என்பதை நாதுராம் கோட்சே உறுதி செய்தார். நாதுராம் கோட்சேவின் செயலை நாங்கள் என்றும் ஆதரித்தே நிற்போம்” என தெரிவித்தார்.

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் செயலை ஆதரிக்கிறோமென கூறிய இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் டாக்டர் ஜெய்வீர் பரத்வாஜின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.