ETV Bharat / bharat

'கேரள சுற்றுலாத்துறையை கோவிட் பிந்தைய காலத்தில் வளர்ச்சிக்கு இட்டு செல்லும்'

author img

By

Published : Jan 14, 2021, 5:21 PM IST

சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட உள்ளூர் சுற்றுலா என்ற புதிய திட்டத்தைச் சுற்றுலாத் துறை பரப்புரை செய்து வருகிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசி திட்டங்களால் கேரளாவின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெற்று விரைவில் அதன் கடந்த கால புகழை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா
சுற்றுலாசுற்றுலா

​​கோவிட் காரணமாக, பல்வேறு இன்னல்களை கடந்தாண்டில் சந்தித்த பின், கேரளாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாரில் டிசம்பர் இறுதி வாக்கில், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே சரியத் தொடங்கியது. குளிர்ந்த காற்று, மூடுபனி மூடிய சூழல்கள் மூணாரை மீண்டும் உயிர்ப்பிக்கத் தொடங்கியது.

நுழைவுச் சீட்டுகளைப் பெற மூணாரின் பல்வேறு இடங்களில் வாகனங்களின் நீண்ட வரிசைகள் காத்திருந்ததைப் பார்த்த உள்ளூர் மக்களின் முகங்களில் புன்னகை மீண்டும் தவழ ஆரம்பித்தன. பசுமையான பின்னணியில் சமூக விலகலைப் பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து, தம்பதிகள் மகிழ்ச்சியுடன் செல்ஃபிக்களை எடுத்து கொண்டிருந்தனர்.

வெளிநாட்டு விமானங்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படாததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் காணப்படவில்லை. "Change of Air" என்றழைக்கப்படும் ஒரு புதிய சுற்றுலா திட்டம் இப்போது அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், எஃப்எம், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று கேரள சுற்றுலா இயக்குநர் பி பாலகிரன் ஐ.ஏ.எஸ். கூறினார்.

ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக வீட்டில் அடைபட்டுக் கிடந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், இப்போது 'பழிவாங்கும் சுற்றுலா' என்ற பெயரில் புதிய இடங்களுக்கு வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். சுற்றுலா என்று வரும்போது, ​​கேரளா என்பது அனைத்து இந்தியரின் மனதிலும் மிகவும் பிடித்த ஒன்றாகும்.

'பழிவாங்கும் சுற்றுலாப் பயணிகளின்' வருகையால் சுற்றுலாத்துறை இழந்த சமநிலையை மீண்டும் பெறும். கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்ட பின்னர் மாநிலம் முழுவதும் வருகை தந்த பயணிகள் எண்ணிக்கையை சுற்றுலாத் துறை இன்னும் கணக்கிடவில்லை என்றாலும், தோராயமான கணக்கீடுகள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன.

இரட்டிப்பாகியது

உதாரணமாக, இடுக்கியில் உள்ள இரவிக்குளம் தேசிய பூங்கா, செங்குத்தான பாறைகளின் மீதேறி உணவுகளை உண்ணும் பிரபலமான மலை ஆடுகளை காண வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டபோது, ​​ஒரு மாதத்தில் 6104 சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட்டனர்.

இந்த எண்ணிக்கை நவம்பரில் 21766 ஆகவும், டிசம்பரில் 43,509 ஆகவும் இரட்டிப்பாகியது. மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் வரும் இடுக்கியில் உள்ள 9 சுற்றுலா மையங்கள் அக்டோபரில் திறக்கப்பட்ட பின்னர் 1,41,396 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

மாநிலத்தில் இதுபோன்ற சுற்றுலா தலங்களை திறந்ததால் சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும் விருந்தோம்பல் தொழில் ஆகியவை வளர்ச்சி பெற்றுள்ளது. இப்போது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பயணிகள் கேரளாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருகிறார்கள்.

ரூ.4,500 கோடி

டிசம்பர் 2 ஆம் வாரத்திற்குப் பிறகு, வட இந்தியாவில் இருந்து அதிகமான மக்கள், குறிப்பாக படகு வீடு பயணத்திற்கு கேரளாவுக்கு வந்தனர். இது இந்தத் துறைக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. படகு வீடு பயணத்திற்காக வரும் விருந்தினர்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்து அதை சுற்றுலாத் துறையிடம் ஒப்படைக்கிறோம். அவர்கள் அதை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கிறார்கள்.

படகு வீடுகளை இயக்கும்போதும் விருந்தினர்களை மகிழ்விக்கும் போது கடுமையான கோவிட் நெறிமுறையையும் உறுதிசெய்கிறோம் என்று படகுவீடு உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர் ஹனி கோபால் கைலாசம் கூறினார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் கேரளாவுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று நம்புகின்றனர்.

ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்க, 59.51 கோடி செலவில் 14 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 26 புதிய சுற்றுலாத் திட்டங்களை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் கோவிட் பரவல் தொடங்கியது முதல் கேரள சுற்றுலாத்துறைக்கு ரூ.35000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள அரசு மற்றும் சுற்றுலாத் துறை போன்றவை இந்தத் துறையை சார்ந்திருக்கும் அதிகமான பணியாளர்களுக்கும் உதவியுள்ளன. சுற்றுலாதுறைக்கு அமைச்சர் ரூ.4,500 கோடி நிவாரணப் உதவிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அவர்கள் சம்பள இழப்பை ஈடுசெய்ய ரூ.10 ஆயிரம் போன்றவற்றை சுற்றுலா அமைச்சர் அறிவித்தார்.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டில் கேரளாவில் 11, 89,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 1,83,84,233 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்தனர். இது முறையே 8.5 விழுக்காடு மற்றும் 11.81 விழுக்காடு வளர்ச்சியாகப் பெற்றனர். கேரளாவின் சுற்றுலாத் துறை மாநிலத்தின் வருவாயில் சுமார் 40 விழுக்காடு பங்களிக்கிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.