ETV Bharat / bharat

குஜராத்தில் லாரி மீது கார் மோதியதில் ஐவர் உயிரிழப்பு!

author img

By

Published : Apr 4, 2020, 7:10 PM IST

சுரேந்திராநகர்: முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் காருக்குள் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

five-died-as-car-rams-into-truck-in-gujarat
five-died-as-car-rams-into-truck-in-gujarat

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் லிம்ப்டி-அகமதாபாத் நெடுஞ்சாலையில் கார் ஒன்று லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர் ஒருவர் தெரிவிக்கையில், “வெள்ளிக்கிழமை (மார்ச்3) இரவு, காந்திநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார், லாரி மீது மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்” என்றார். கரோனா பரவல் அச்சம் காரணமாக, நாடு முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 21 நாட்கள் பூட்டுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நடந்துள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் இரு குழுக்கள் இடையே துப்பாக்கிச் சூடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.