ETV Bharat / bharat

கேரள முதலமைச்சரின் கூடுதல் தனிச்செயலருக்கு அழைப்பாணை!

author img

By

Published : Nov 5, 2020, 6:13 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ரவீந்திரன்
ரவீந்திரன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் அண்மையில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின.

அதில், இந்தக் கடத்தலில் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவித்தார். அதனடிப்படையில், ரவீந்திரனுக்கும் அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அந்த அழைப்பாணையில், கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நாளை (நவ. 06) விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கேரள முதலமைச்சரின் நம்பகமான IAS அதிகாரி எம்.சிவசங்கர் வீழ்ந்த கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.