ETV Bharat / bharat

'துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் மம்தா வழங்கியது சரிதான்' - அபிஜித் பானர்ஜி!

author img

By

Published : Oct 21, 2020, 12:43 PM IST

கொல்கத்தா: துர்கா பூஜை கொண்டாடவுள்ள 36 ஆயிரம் குழுக்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரூபாய் 50 ஆயிரம் வழங்கியது விமர்சனத்திற்கு ஆளான நிலையில், இந்த முடிவு சரியானது என பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

abjiaji
abji

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடவுள்ள 36 ஆயிரத்து 946 குழுக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதற்காக கூடுதலாக 50 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல தரப்புகளில் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் முடிவு சரியானது என பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த பூஜை நடத்தும் குழுக்களுக்கு கூடுதல் பணம் வழங்கியது மோசமான முடிவு இல்லை. பண்டிகை காலத்தில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடிவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றுவது அவசியம். தொற்றுநோய் பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதும் முக்கியமானது. விரைவில், பொருளாதாரத்தை மீட்டெக்க முடியும் என நம்புகிறேன். பேருந்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில்கள் சிறந்த காற்றோட்டம் அமைப்பைக் கொண்டிருப்பதால் உள்ளூர் ரயில் சேவைகளை தொடங்குவது தவறில்லை. இருப்பினும், சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மக்கள் முகமூடி அணிவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

இதற்கிடையில், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துர்கா பூஜா பந்தல்களிலும் மக்கள் செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.